திரைப்படக் குறுக்கெழுத்து
இடமிருந்து வலம்
- அபிநய சரஸ்வதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் இவர் (5)
- பிரமிளா தேவி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை – இவரது மகளும் கனகா என்ற பெயரில் நடித்தார். (3)
- 1931ம் ஆண்டு தமிழில் (தெலுங்கு, ஹிந்தி உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன) வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் (4)
- இந்நாளைய செலவாளி இயக்குனரான இவரது பெயரில் எண்பது படங்களைப் படைத்த புகழ் பெற்ற முன்னாள் இயக்குனர் ஒருவரும் இருந்தார். (4)
- கேரளாவில் பிறந்து, தமிழில் முயன்று, வாய்ப்புக் கிடைக்காமல் ஹிந்திக்குச் சென்று டர்ட்டியாக நடித்தவர்(6)
- 1934ல் ஒரு படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை. இனிஷியல்களும் பெயரின் கடைசி எழுத்தும் இல்லாமல் (6).
- நாட்டியப் பேரொளி (4)
- எம்.ஜி.ஆரும். கமலஹாசனும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் (6)
- நடிகர் சிவகுமாரின் மூத்த மருமகள் (3)
- பாலச்சந்தரின் சொந்தப்பட நிறுவனம்.(5)
- மும்முறை ஊர்வசி விருது பெற்ற தென்னிந்திய நடிகை. (3)
- தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் எனப் பட்டப்பெயர் பெற்றவர்(6)
வலமிருந்து இடம்
5, ரஜினிகாந்த் ஸ்ரீதேவியுடன் இணைந்து இரட்டை வேடமேற்று நடித்த முதல் படம் (2)
- 2500 படங்களுக்கு மேல் நடித்த ஒரே தென்னிந்திய நடிகை (4)
மேலிருந்து கீழ்
- 450 படங்களுக்கு மேல் தோன்றிய சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் (7)
- M.G. ராமச்சந்திரன் என்பதில் ‘M’ எழுத்து குறிக்கும் ஊரின் பெயர் (4)
- நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூறாவது திரைப்படம் (6)
- மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற ஒரே தமிழ்த் திரைப்படம் (6)
- இன்றும் தமையன், தமக்கை உறவுக்கு உதாரணமாகச் சொல்லப்படும் திரைப்படம் (5)
கீழிருந்து மேல்
- தொடர்ந்து மூன்று தீபாவளிகளுக்கு பிராட்வே திரையரங்கில் ஓடிய ஒரே தமிழ்த் திரைப்படம் (4)
- தமிழ்த் திரைப்படவுலகின் அந்நாளைய சூப்பர் ஸ்டார்(5)
- குடும்பச் சூழல் கதைகளைக் கையாண்டு சிகரத்தை அடைந்த இயக்குனர் (6)
- முக்கோணக் காதலைப் பிரதானமாகக் கையாண்ட இயக்குனர். (3)