\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன்மத வருட மாத பலன் – ஐப்பசி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on September 28, 2015 0 Comments

Astro-3_620x264(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக்கணிக்கப்பட்டுள்ளது)

தமிழ் ஐப்பசி – ஆங்கிலத்தில் செப்டம்பர்-அக்டோபர்

மேடம் (மேஷம்) – உயர்ந்த மனநிலை, சந்தோஷங்களும், சகலபாக்கியங்களும் வரும் மாதம், மகளிர் சுகம், பிள்ளைகள் சுகம், ஆயினும் உற்றார் இனசனத்தினால் கவலைகள், மனத்தாபங்கள் உண்டாகலாம்.  காலில் காயங்கள், வியாதிகள் வரலாம். உணவு விடயங்களில் அவதானம் தேவை, சமிப்பாடு சிரமங்கள் ஏற்படலாம். பொருட்சேதம் ஏற்படக்கூடும்.

இடபம் (ரிஷபம்) – பிறவூர் பயணம் வரலாம். நட்பினால் மகிழ்ச்சி ஏற்படும். வாக்குவாதங்களில் எதிராளிகளிடம் இருந்து வெற்றி கொள்ள வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுடன் விரோதம் வரக்கூடும். இனசனத்தினால் முட்டுக்கட்டைகள், முரண்பாடுகள் உண்டாகலாம்.

மிதுனம் – வேலைத்தள மகிழ்ச்சி, பொருள், பணம் வரலாம். மகளிர் அனுகூலம், வாழ்க்கை நிலைப்பாட்டில் பிரிவு ஏற்படலாம். கைக் காரியங்களில் அனுகூலம், நிலப்பரப்பு சொத்துக்களினாலான இலாபம்.

கர்க்கடகம் (கடகம்) – பெரியோர் மதிப்புண்டு. குடும்ப, விருந்துபச்சார மகிழ்ச்சி. இம்மாதம் பொதுவாகக் காரியத்தடைகள் ஏற்படலாம். முக்கிய காரியங்களின் ஆரம்பத்தை முடிந்தால் பிந்தி வைத்துக்கொள்ளலாம். நிலைப்பாட்டில் பிரிவு, வாழ்க்கைத் துணைச் சுகயீனம் ஏற்படலாம். பொருள் வரவில் குறை, பொறாமை உண்டாகலாம்.

சிங்கம் (சிம்மம்) – வருமான விருத்தி உண்டு, எனினும் உழைத்த, அதிகப் பிரயாசம் செய்தமைக்கு ஏற்பப் பணம் கைகூடவில்லை என்ற மனநிலை. தன்மானம் குன்றுதல், உடல் வெப்பம் அதிகரிப்பு, மனப்பயம், பலங்குன்றுதல் போன்றன ஏற்படலாம்.

கன்னி – பல வழிகளிலும் செலவு கூடியதொருமாதம். நண்பர்களால் கவலையுண்டாகலாம். பணக்குறைவு, மற்றும் நல்ல முயற்சிகளும் பயனளிக்காது போகலாம்.

துலாபம் (துலாம்) – வெளியூர்ப் பயணம், மதிப்புப் பெறுதல், நிறைவான வாழ்க்கை அனுபவம் சிலருக்கு ஏற்படும். அதே போன்று ஏற்கனவே ஏற்பட்டுள்ள நோய், வியாதியில் இருந்து தெளிவு, சுகம். அலைச்சலால் ஆன தேகப் பருமன் குன்றுதல், அன்றாட காரியக் கடினம் ஏற்படுதல் போன்றவை ஏற்படலாம். குடும்பம் மற்றும் நண்பர்களினால் தலையிடி வரலாம்.

விருச்சிகம் – இம்மாதம் அவமானம், இனசனத்துடன் ஆன விரோதங்கள் ஏற்படலாம். அதிகப் பிரயாசம், அவதானம் தேவை களைப்பினாலான கவனயீனக் காயங்களும் வரக்கூடும். உழைப்புத்தொழில் மற்றைய வாழ்க்கை நிலைப்பாடு உயர்வு, தாழ்வற்ற சமநிலையில் காணப்படும்.

தனு – செய் காரியங்களில், தான, தருமம் செய்வதில் சித்தி பெறலாம். வாகன சௌகரியங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆயினும் சூழ்ச்சிக்காரர்கள் தொடர்பினால் கேடு வருதல், மனப் பிராந்தி கவலை. உடல் சுகம் குன்றுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு.

மகரம் – சொத்து நிலங்களினால் ஆதாயம் பெறுதல். வீட்டிலும் வெளியிலும் நினைத்த காரியங்களிலும் சிறப்பு உண்டாகும். ஒரு சில காரியங்களில் முட்டுக்கட்டைகள் எதிர் நோக்கலாம், அதிக மனக் கவலைகளும், சிலருக்கு இரத்த பீடைகளும் உண்டாகலாம்.

கும்பம் – நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். ஆயினும் தொழிற்கடினங்கள், கொடுக்கல் வாங்கல்களில் தலையிடி வரலாம். தொழிலும் இனசனங்களினாலும் கடினங்கள் ஏற்படலாம். எதிராளிகளின் முட்டுக்கட்டை மற்றும் கிரகமாற்றங்களினால் ஆன தடைகளும், நோய்களும் ஏற்படலாம்.

மீனம் –சமாதான வாழ்வைப் பிரதானமாக விரும்புதல். இம்மாதம் வாக்குவாதங்களிலும், அலைச்சல் மற்றும் அதிகப் பயனற்ற முயற்சிகளிலும் நாழிகை போய்க்கொண்டிருக்கும். அன்றாட நடைக் கடினங்கள், பலவிதங்களினாலும் வாழ்க்கையில் இடையூறுகள் உள்ள மாதமிது.

  • பனிப்பூக்களின் பரிட்சார்த்தத் தொகுப்பு (ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad