பயிற்றைக் கறி முறை (பாசிப்பயறு – Moong Dhal)
1/2 lb பாசிப்பயறு
2 சிறு வெங்காயம் (நறுக்கியெடுத்துக் கொள்க)
2 தேக்கரண்டி கறித்தூள்/ யாழ்ப்பாணத்தார் கறிமிளகாய்த்தூள்
2 பச்சை மிளகாய் (நறுக்கியெடுத்துக் கொள்க)
4 உள்ளிப்பூண்டு நகங்கள் (தட்டியெடுத்துக் கொள்க)
5 கோப்பை தண்ணீர்
1 கோப்பை தடித்த தேங்காய்ப்பால்
போதிய அளவு கடல் உப்பு
½ தேக்கரண்டி சீரகத்தூள் (fennel)
1 தேக்கரண்டி கடுகு
வெட்பத்தில் பதப்படுத்த வேண்டியவை
1 செத்தல்/உலர் மிளகாய்
1 சிறுகிளை கறிவேப்பிலை
½ தேக்கரண்டி கடுகு
2 மேசைக்கரண்டி நெய்/ஆலிவ் எண்ணெயையும் பாவிக்கலாம்.
செய்முறை
வாணலி அல்லது அகன்ற பாரமான சமையல் பாத்திரத்தில் பாசிப்பயற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வறுத்தெடுத்த பயற்றை நீர் விட்டு, பயற்றம் விதை மிருதுவாகும் வரை அவிக்கவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், கறித்தூள், உள்ளி, தேங்காய்ப் பால் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். இவை யாவற்றையும் 5 நிமிடங்கள் மத்திம வெப்பத்தில் கொதிக்க விடவும்.
அடுத்து வெட்பத்தில் பதப்படுத்தவேண்டிய வாசனைத் திரவியங்களை நெய்யில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவிந்து கொண்டிருக்கும் பாசிப்பயற்றுக் கறிக்கூட்டில் வாசனைத் திரவியங்களைத் துளாவி அடுப்பில் இருந்து இறக்கிச் சோறு மற்றும் அப்பளத்துடன் பரிமாறலாம்.
- யோகி அருமைநாயகம்.