\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன்மத வருட மாத பலன் – கார்த்திகை மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on October 25, 2015 0 Comments

astro-square620x620(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது)

தமிழ் கார்த்திகை – ஆங்கிலத்தில் ஆக்டோபர் – நவம்பர்

மேடம் (மேஷம்) – உடுப்பு ஆபரணங்கள் வருகை, நினைத்தவை கைகூடுதல், சந்தோசம். எதிரி பயங்கள் உண்டாதல், மாத இறுதியில் பயம் நீக்கம். குடும்ப மனத்தாபங்கள், வீட்டில் பிள்ளைகளினால் சிரமங்கள் ஆகலாம்.

இடபம் (ரிஷபம்) – மனம் மகிழ்வுதரும் மாதம், உடல் ஆரோக்கியம் குன்றலாம். தொழிலில் இடையூறு, காணி, நிலம் சொத்துக்களால் ஆதாயம் வரலாம். மனதில் தாழ்ந்த நிலை,கோபம் அதிகமாகுதல், சுய துர்ச்சமான செயல்களால் கவலை உண்டாகலாம்.

மிதுனம் – சந்தோசம், சகலபாக்கியங்களும், நல்லுறக்கம், பொருள்கள் வருகை உண்டாகும் மாதம். மாதத்தின் முற்பகுதியில் ஏற்பட்ட ரோகங்கள் மாறிவிடும். ஆயினும் நியாயமற்ற செயல்களில் கரிசனை காட்டுவதில் இருந்து விலகிக் கொள்ளுவதும் அவசியம். துர் நோக்கு உடையவர்கள் தொடர்பால் கேடுகள், காரியக்கேடுகளும் வரலாம்.

கர்க்கடகம் (கடகம்) – மகளிர் மூலமான சுகங்கள் உண்டாகலாம். பிள்ளைகள் அவர்கள் தொடர்புகளினால் கவலை வரலாம். அதே சமயம் சிலருக்குத் திருடர்ளால் பலனுமம் வரக்கூடிய அபூர்வ மாதமிது. காரிய ஆரம்பங்களில் தடைகளும், பிரயாணங்களில் சிரமங்களும் வரலாம்.

சிங்கம் (சிம்மம்) – தூக்கம், மற்றும் உணவுப் பண்டங்களினால் சந்தோசம். ஆயினும் அவதானமாக இருக்கவும், பாரிய நோய் உண்டாகக் கூடிய மாதமிது. மேலும் சொந்த பந்தங்களினால் நாசம் வரக்கூடியதாகவும் உள்ளது. பிறருக்கு அடிமை, அனாவசியமாகக் கீழ்ப்படுதல், அலைதல், வாழ்க்கைத் துணையுடனான முரண்பாடுகள், சோர்வான மனநிலை ஏற்படலாம்.

கன்னி – நினைத்தவை கைகூடும் மாதம் இது. செய்யும் தொழிலில் விருத்தி. பணவரவு மேம்படும். பலவகைப்பட்ட இடையூறுகள், குடும்ப முரண்பாடுகள், மற்றவர்களால் தேவையில்லாத தலையிடிகளும் வரலாம். குறிப்பாக நண்பர்களினால் கவலை, மற்றும் நீண்டகாலப் பரம எதிரிகளால் பயம் உண்டாகலாம்.

துலாபம் (துலாம்) – பண வரவு உண்டு. பிள்ளைகள் வீடு சார்ந்த மகிழ்ச்சி. தூக்கத்திலும் மேம்பாடுகள் உண்டாகும். எனினும் பின் மாதத்தில் உபத்திரங்கள் பல ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏமாற்றங்கள், ஏமாற்றப்படுதல், வீண்பழி சுமத்தப்படுதல் இதனால் உண்டாகும்

மனக்கவலை, மனச்சோர்வு ஆகியவற்றையும் எதிர்பார்க்கலாம்.

விருச்சிகம் – இம்மாதம் பொருட்கள் பலவிதம் பெற்றுக் கொள்ளலாம். இருக்கும் வாழ்க்கை நிலைப்பிரழ்வுகள், பிள்ளைகள் குறைகள், பொருட்சேதங்கள், அதிக கோபம் ஆகியவை ஏற்படலாம். ஆயினும் நண்பர்களினால் சந்தோசம், ஆதாயம் மற்றும் பிறர் மதிப்பும் வரலாம்.

தனு – காணி, நிலம், சொத்துக்களால் ஆதாயம் வரலாம். தொழில் காரியங்களில் ஆற்றல் குன்றிக் காணப்படும். செய்தொழிலில் காட்டிய ஏனோதானோ என்ற ஒழுக்கமற்ற கைமுறைகள் இம்மாதம் காரியக்கேட்டை உண்டு பண்ணலாம். பொருட்களினால் சேதங்கள் உண்டாகக் கூடும், அச்சமான மனதிற்கு உள்ளாகலாம்.

மகரம் – மன மகிழ்ச்சி, சன்மானப் பண வருகை இருப்பினும் தொழிலில் உயர்வு, தாழ்வற்ற மாதமிது. சற்றுக் குழப்பமான மாதம். சிலருக்கு மற்றவர்கள் மதிப்பும், அதே சமயம் சிலருக்கு அவமதிப்பும் ஏற்படலாம். உடல்நிலை குன்றலாம்,

கும்பம் – அவதானமாக இருக்கவும் எதிரிகளால் சேதங்கள் ஏற்படாலாம். தொழிலில் சுகங்கள், சிறு வெற்றிகளுண்டு. நல்ல பெயரும் பெற்றுக் கொள்ளலாம். தொழிலில் தடைகள், கூடவேலை செய்பவர்களில் சிரமங்களும் வரலாம். ஆயினும் முனையும் காரியங்களில் வெற்றியும் கைகூடும்.

மீனம் – இம்மாதமும் வேலை வகையில் கலகங்கள் உண்டு. பொருட்சேதங்கள், நட்டங்கள், பயனற்று வீண்பழிகேட்பது போன்றவை தொடரும். பயனற்ற முயற்சிகள் பலவும் இம்மாதத்தில் உண்டாகலாம். இனசன விரோதங்களும், பெண்களினால் பீடைகளும் உண்டாகலாம்.

பனிப்பூக்களின் பரிட்சார்த்தத் தொகுப்பு (ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad