பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி
Holiday Shopping 2015
வட அமெரிக்க வாடிக்கையாளரே உங்கள் வாகனத்தை ஆரம்பியுங்கள். இந்த வாரம் (11/26/2015) அமெரிக்காவில் வியாழன் நன்றி நவிலல் நாள் உணவையுண்டு ஏப்பம் விட்ட அடுத்த நிமிடமே தள்ளுபடி பார்த்து பண்டங்கள் வாங்கி வர ஓடி வேண்டாமா? கனடாவிலும் ‘பாக்சிங்டே’ என்று தள்ளுப்படிக் காலம் ஆரம்பம். இந்த வருடம் சுமார் 135.8 மில்லியன் அமெரிக்க நுகர்வோருடன் நமது தமிழ் மக்களும் ஏட்டிக்குப்போட்டி போட்டு பண்டிகைகாலத் தள்ளுபடிகள் பெற்று செலவழிக்கவுள்ளனர்.
அமெரிக்கா சில்லறைக்கடை ஒன்றியம் வழக்கமாக பண்டிகைக்கால குதுகலத்திற்கு முன்னோடி. இந்த வருடம் சென்ற வருடத்திலும் 3.7 சதவீதம் அதிக வருமானத்தை வர்த்தகர்கள் எதிர்பார்க்கலாம் என்கிறது. ஆயினும் இந்த ஒப்பீட்டை நாம் ஓரளவிலேயே எடுத்துக் கொள்ளமுடியும். காரணம் இந்தப் புள்ளிவிபரவியல் வாடிக்கையாக கொள்வனவு செய்யும் மக்களை சென்றவருடத்தை விட எவ்வளவு செலவழிக்கவுள்ளீர்கள் என்று கேட்கிறது. மக்கள் சொல்வது ஒன்று செய்வது இன்னுமொன்று என்பது நாம் யாவரும் அறிந்த விடயமே.
எனவே இந்த நன்றி நவிலல் பண்டிகைக் காலத்தில் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் என்ன என்று பார்த்தால், அது இலேசாகவே அதிகரிக்கும் என்று சொல்லலாம். காரணம் கைச் சம்பளங்கள் அதிகரிப்புத் தொடர்ந்தும் குறைவாகவேயுள்ளது, ஆயினும் வட அமெரிக்காவில் பணவீக்கமும் வழக்கத்திலும் குறிந்து தான் காணப்படுகிறது. வாக எரிபொருள் விலைகளும் மட்டமாகவேயுள்ளது. எனவே மக்கள் கையில் செலவுக்கு சற்று அதிக கைக்காசு உள்ளது. இந்தப் பணத்தில் அமெரிக்க மக்கள் நீண்டகாலக் கொள்வனவுப் பொருட்களுக்கு ஒருபாகத்தைச் செலவழிக்கவுள்ளனர். நீண்டகாலக் கொள்வனவு என்பது புதிய கார் வாங்குதல், மற்றும் மாதமாத சௌகரிய, கேளிக்கை தொலைக்காட்சி சேவைகள் போன்றவையாக அமையலாம். தற்போது மக்களின் வருமானத்தில் இருந்து சேமிப்பும் 4.8 சதவீதமாகவுள்ளது. என்னும் மக்கள் எவ்வளவு இறுதிவருடப் பண்டிகைகால தள்ளுபடிப் பரிசுப்பொருட்கள் வாங்குவார்கள் என்பது கேள்விக்குறியே.
பாரிய பன்முகக் கடைகளாகிய ‘மேசிஸ்’ (Macy’s) மற்றும் ‘நோட்சறம்’ (Nordstrom) போன்ற வருடத்தின் முன்றாவது வருமான அறிக்கைகள் குறைந்தாகக் காணப்படினும், சிறிய கட்டமாக நிலைத்திருக்கும் சில்லறை கடைகளின் வருமானத்திற்கு வருடா வருடம் போல சாவுமணியையும் அடித்துவிடமுடியாது. இணைதள சில்லறைக் கொள்வுனவு வர்கத்தகம் இவ்வருடம் மூன்றாவது வருட அறிக்கைகளில் 15.1 ஒரு வீதம் அதிகரித்துள்ளது என்கிறது அமெரிக்க வருமாண வரி அரசு அறிக்கைகள். ஒட்டு மொத்த சில்லறைக் கடைப்பண்டக் கொள்வனவை எடுத்துப் பார்த்தால் இன்றும் மின்னதளமூடாக 7.4 வாடிக்கையாளர் சதவீதமேயாகும். எனவே நிச்சயமாக வட அமெரிக்காவில் சில்லறைக் கடை வியாபாரம் செழிப்பாகவேயுள்ளது எனலாம்.
ஆயினும் கொள்வனவு செய்யும் மக்களின் மனப்பாங்கை சில்லறைப் பரிசுப் பண்டக் கொள்வனவுகளை மாத்திரம் வைத்து முடிவெடுக்கமுடியாது. காரணம் வாடிக்கையாளர் சில்லறை வர்த்தக் கொள்வனவு என்பது மளிகைக்கடைச்சாமான்களில் இருந்து, எரிபொருள், மற்றும் ஒப்பீட்டளவில் பெரிய புதிய வாகனக் கொள்வனவாளரையும் உள்ளடக்கும். எனவே மேலே கூறப்பட்டவை யாவும் ஏறத்தாழ அரைவாசி வாடிக்கையாளர் சில்லறைக் கொள்வனவுகளுக்குச் சமமாகும். மேற்கொண்டு வாகனம், எரிபொருட்கள், மளிகைச் சாமான் வாங்குதல் இன்றும் மின்தளக் கொள்வனவுக் கணிப்புக்களுக்கு உள்ளாகாது; எனவே மின்தளம் ஊடான உண்மையான வியாபாரச் சந்தர்ப்பம் அல்லது எதிர்பார்க்கக் கூடிய சந்தை வருமானம் 16 சதவீதம் என்கிறது வாடிக்கையாளர் சில முற்போக்கு வர்த்தக ஆராய்ச்சியாளர்கள் குழுக்கள். இது மேலே குறிப்பிடப்பட்ட மின்தளமூடான கொள்வனவுத் தரவுகளிலும் இரண்டு மடங்கிற்கும் அதிகமானது எனலாம்.
பண்டிகைக் கால வாடிக்கையாளர் கதை இத்துடன் முடியவில்லை என்கிறது பிரபல ‘டிலோயிட்’ (Deloitte) வர்த்தக ஆராய்ச்சி அறிவுரைக் கூடம். அவர்களது ஆராய்ச்சியானது இந்த வருடம், மூன்றில் இரண்டு பகுதி கட்டங்களாக நிலைத்திருக்கும் சில்லறைக்கடைகளின் உயர் கொள்வனவு வாடிக்கையாளரின் மின்தள வர்த்தகதாபனத் தொடர்புகள் வழி வகுக்கும் என்கிறது. மேலும் இந்த ஆராய்ச்சி அறிக்கை திடமாக நவீன ஆய்வுத் திறனுள்ள வாடிக்கையாளர்கள் தமது கணனி, மின் தட்டுப்பலகைகள், கைத்தொலைபேசிகளில் மென்பொருள் மூலம் ஆராய்ந்து நல்ல தள்ளுபடிகளை நாள், நேரம் பார்த்துத் தேடிவருவார்கள் என்கிறது.
பண்டிகைக்கால வர்த்தகத் தள்ளுபடிகள் காலத்தைத் தாமதிக்காமல் போனால் அதிக பயன் பெறலாம். மின்தளப் பண்டிகை தள்ளுபடிகள் நன்றிநாளில்தான் அதன் மிகக்குறைந்த விலையை அடையுமாம் என்கிறது ‘அடோபி’ எனும் விலைவாசி கணிப்புத்தாபனம். நன்றி நவில் நாளன்று நுகர்வோர்,வாடிக்கையாளர் சராசரியாக 27 சதவீதத் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். எனவே வட அமெரிக்காவில் எமது தமிழரும் சரி, மற்றய மக்களும் சரி அமெரிக்க பந்துவிளையாட்டுக் கேளிக்கைகளைப் பார்ப்பதும், நழுவி அயலில் உள்ள சில்லறைக் கடைகளுக்கும் பம்பரம் போல் பயணம் செய்வதாகவும் இருப்பார்களாம். இவ்வாறு செய்பவர்கள் தள்ளுபடி வெற்றியைக் காண்பார்கள்.
எனவே வீட்டில் இருந்து ஆராய விரும்பாதவர்கள் நன்றி நவிலல் நாள் வியாழனிற்கு முன்வரும் திங்களில் (11/23/2015) இருந்து தள்ளுப்படி தேடலாம். குறிப்பாக அடோபி அறிக்கையின் படி இலத்திரனியல் மின்சார உபகரணங்கள் தள்ளுபடிகள் நன்றி நவிலல் வார இறுதிகளிலேயே தள்ளுபடி உச்சமாகக் காணப்படுமாம்.
தொகுப்பு: யோகி
உசாத்துணை :
- 2015 November Consumer Survey – NRF Report 2015
- US Census Bureau News – Quarterly Sales E-Commerce Sales 3rd Quarter 2015
- Retailers Rejoice: Online Sales to Hit New Record this Holiday Season – Adobe News
- Reuters report on American Express Report Consumers Preparing to Find Steals & Deals This Holiday
- Deloitte consumer report – Retail holiday sales to increase 3.5 – 4.0 %
Tags: Thanks Giving