மிளகு வான்கோழிப் பிரட்டல்
வழக்கமான செட்டிநாட்டுக் கோழிச் சமையல் முறையை வட அமெரி்க்க
நவம்பர் மாதப் பண்டிகைசமயங்களில் சமைக்கப்படும் வான்கோழிச் சமையலாக
மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தேவையானவை
2.5 – 3 இறாத்தல் வான்கோழி
0.5 மேசைக்கரண்டி மஞ்சள்
வாசனைத் திரவியங்கள்
2 மேசைக் கரண்டி பெருஞ்சீரகம்
2 மேசைக் கரண்டி சீரகம்
3 மேசைக் கரண்டி மல்லி
3-5 கிராம்பு
1 மேசைக் கரண்டி ஏலக்காய் விதைகள்
1 கறுவாப்பட்டை – இரண்டாகப் பிளந்து எடுத்துக் கொள்ளவும்
2 மேசைக் கரண்டி மிளகையும் குற்றி எடுத்துக் கொள்ளவும்
மூலிகையிலைகள்
2 கிளைகள் கறிவேப்பிலை
2-3 இந்தியப் பிரியாணி மலபார் இலை (Indian Bayleaf) கிடைக்காவிட்டால்
சாதாரண உள்ளூர் பேலீஃப் (bayleaf) பாவித்துக் கொள்ளலாம்.
காய்கறி
3 தக்காளிப் பழங்களைச் சிறியதாக நறுக்கியெடுக்கவும்.
1 பெரிய மஞ்சள் வெங்காயம் – சிறிதாக நறுக்கியெடுத்துக் கொள்ளவும்
5-7 உள்ளிப்பூண்டு நகங்களை மசித்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
3 அங்குல இஞ்சியையும் நன்றாக் குத்தி அரைத்து எடுத்துக் கொள்ளவும்
1 கரண்டி தோல் அகற்றிய உளுந்தையும் சுமார் 30-45 நிமிடங்கள் வரை
தண்ணீரில் வைத்து வடித்தெடுத்துக் கொள்ளவும்.
1/2 கோப்பை தண்ணீர்
தேவையான அளவு கடலுப்பு
தேவையான அளவு சமையல் எண்ணெய்
செய்முறை
வான் கோழியை வெட்டிச் சிறிய பாகங்களாக்கவும். எலும்புடனான பகுதிகளைத்
தயாரிக்கும் கறிக்கூட்டு உள்ளே சுவர குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.
அடுத்து வாணலியை, அல்லது அகன்ற சமையல் பாத்திரத்தை
மத்திமத்திலிருருந்து உயர் வெப்பத்திற்கிடையே அடுப்பில் வைக்கவும். அடுத்து
ஏலக்காய், மிளகைத் தவிர மீதி வாசனைத் திரவியங்கள், கறிக்கூட்டு
மூலிகைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன்
வெங்காயம்,உள்ளி, இஞ்சி, மற்றும் ஊற வைத்த உளுந்தையும் சேர்த்து பொன்னிறமாகும்
வரை 2-3 நிமிடங்கள் வறுக்கவும்.
அடுத்து மஞ்சளையும் ஏலக்காயையும் போட்டுக் கிளறவும். அடுத்து நறுக்கி
எடுத்த தக்காளிப் பழத் துண்டுகளை வாணலியில் இட்டு அவை அவிந்து சற்றுக்
கரையும் வரை 4-5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து வான் கோழித் துண்டுகளையும் இட்டு அரைக் கோப்பைத் தண்ணீரையும்
சேர்க்கவும். அ டுத்து யாவற்றையும் கொதிப்பு நிலைக்குக் கொண்டு வந்து அதன்
பின்னர் மூடி, 25 நிமிடங்கள் வரை மத்திமத்திற்கும்-குறைந்த வெப்பத்திற்கும்
இடையை அடுப்பில் அவிய விடவும்.
இறுதியாக, மிளகுத் தூளைச் சேர்த்து, கிளறி வெப்பத்தை மீண்டும் மத்திமச் சூட்டிற்குக்
கொண்டு வந்து, கறி நன்றாக வற்றிப் பிரட்டலாக வரும் வரை 3-5 நிமிடங்கள்
வரை அவித்து இறக்கவும்.
- யோகி அருமைநாயகம்.