\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனங்கொத்தி

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments

k2_620x620

சற்றே கலைந்த கேசம்
சற்றே சாய்ந்த வதனம்
சற்றே பரந்த நுனலும்
சற்றே வளைந்த புருவம்

சற்றே குளிர்ந்த நயனம்
சற்றே தெரிந்த காதோரம்
சற்றே விரிந்த நாசித்துவாரம்
சற்றே குவிந்த அதரம்

சற்றே கூர்ந்த முகவாயும்
சற்றே வரைந்த கழுத்தும்
சற்றே சரிந்த உடைகளும்
சற்றே மலர்ந்த கொங்கையும்

சற்றே இளைத்த இடையும்
சற்றே ஒளிர்ந்த கமலமும்
சற்றே மறைந்த பெண்மையும்
சற்றே மறைத்த மடல்களும்
சற்றே ரசித்த கணங்களும்

சற்றே ருசித்த மனமதும்
சற்றும் மறந்திட மறுத்தே
சுற்றிச் சுற்றி மருகுதே !!!

வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad