\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யார் அந்த இராவணன் – பகுதி 2

ravanan2_2_620x868(யார் அந்த இராவணன்பகுதி 1)

இலங்கைத் தீவு உருவான கதை

இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியைச் சமனும், வடபகுதியைஈழம்என்ற பெயரில் அழைக்கப்பட்டகுமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகள்குமரிக்கண்டம்என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிக் கண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.

இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி ஆட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்து விட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரதக் கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாகப் பிரிந்தது. சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக் கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ravanan2_1_620x868ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel 16 February 1834 – 9 August 1919) கூற்றுப்படி குமரிக் கண்டமே லெமூரியாக் கண்டம்.. மேலும் லேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும், அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லை எனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிஃபிக் கடல்வரை இருக்கப் பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவு படுத்துகின்றனர்.

இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.

குமரியின் சந்ததியில் தோன்றிய தமிழ் அரசர்களுள் பரதனும் ஒருவன். இந்தப் பரதன் குமரிக் கண்டத்தை நாற்பது வருடங்களாக ஆட்சி புரிந்தான். ஒரு தாயானவள் தனது பிள்ளைகளை எவ்வளவு கரிசனையுடனும் அன்புடனும் பராமரிப்பாளோ அது போலவே பரதனும் தனது குடிமக்களையும் பராமரித்தான். இதனால் அவனது குடிமக்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். அது மாத்திரமன்றி இக் குமரிகண்டமானது பரதனது திறமையான ஆட்சி முறையினால் பலவகைகளிலும் சிறப்புற்று விளங்கிற்று. இக்காரணங்களினால் அவன் ஆட்சி புரிந்த நிலப்பரப்பாகிய குமரிக் கண்டமே பரதகண்டமென வழங்கப்படலாயிற்று.

இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாகக் கூறப்படும் இராவணனும் அவனைச் சேர்ந்தவர்களும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் மிகவும் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமய வழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமாயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாகக் கொண்டு காணப்படுவதால் தென்பகுதியைச் சேர்ந்த அரசனான இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாகச் சித்தரித்துள்ளார்கள் என்பதும் சிலருடைய கருத்து.

ravanan2_3_820x549இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ள போதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக் குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்குப் பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனும் அவனைச் சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.

இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாகப் பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களைத் தலைநகராகக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது.

துணை நூல்கள்/ Reference Books

  1. Arya Chakravarties of Tamil Eelam; M.D.Raghavan; In Tamil Culture in

Ceylon, Kalai Nilayam Press – 1946.

  1. Matrimonial Alliances between Tamilnad and the Sinhalese Royal Family

in the 18th Century – January 1974, Jaffna, Tamil Eelam

  1. Tamil Rulers of the Kandyan Kingdom; G.Amirthalingam

London, 4 March 2006

  1. The Tamil Kingdom in Jaffna –Early Beginnings to the Court of the

Ariya Chakravartis; Dr.H.W.Tambiah; January 1968, Madras, Tamil Nadu

  1.     https://kallarperavai.weebly.com/ கட்டுரை வேத வித்தகன்

இராவணன்”  அக்கினி புத்திரன்

இன்னும் வளரும்…

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad