\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on November 30, 2015 0 Comments

astro-square620x620(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது)

தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் நவம்பர்  டிசம்பர்

மேடம் (மேஷம்)  – இடையூறுகள் மத்தியிலும் சாந்தமான வாழ்வு. கைக் காரிய இடையூறுகள் தொடரலாம், ஆயினும் நலமான சந்தோசம் தரும் முயற்சிகள் நிறைவேறும். தாழ் மனம், துச்ச குணமுடைய சகபாடிகளால் தலையிடியும் ஆகலாம்.

இடபம் (ரிஷபம்) –  இம்மாதம் சற்று உடல் ரீதியிலான காயங்கள் வராது பார்த்துக் கொள்ளுதல் முக்கியம். குடும்பத்தார்,சுற்றியுள்ள இனசனங்களால் தொந்தரவு மற்றும் மரியாதைக் கேடும் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் உடன்தடைகள் வரலாம், இதனால் வீண் அச்சமும் உண்டாகலாம் ஆயினும் நினைத்த காரியத்தில் வெற்றியும் பெறலாம்.

மிதுனம் – உடல் சுகங்களைப் பார்த்துக் கொள்ளுதல் அவசியம், சுவாச கால்வாய் நோய்கள், காய்ச்சல் உண்டாகலாம். உள்ள நிலைப் பிரிவு, வேலையிடத்திலும் வாக்குச் சண்டை சச்சரவுகள், எதிர்ப்புகள் வரலாம். ஆயினும் மனமகிழ்ச்சி தரும் மாதமிது. காரியங்களில் கைகூடும், நற்பெயரும் வரலாம்.

கர்க்கடகம் (கடகம்) – நினைத்தவை கைகூடும். நட்பினால் ஆன மகிழ்ச்சி, மன உயர்ச்சி, புதிய தானம் மற்றும் பண வரவு ஆகியவை உண்டு. சராசரி நடைமுறையில் சிரமங்களும் செலவுகளும் உண்டு, ஆயினும் ஒட்டு மொத்தத்தில் சுபமான வாழ்க்கை நிலை.

சிங்கம் (சிம்மம்) – உடல் நிலை அவதானம் தேவை, தொற்று வியாதி நோய்களுக்குள்ளாகி உடல் சுகம் குன்றலாம். வீடு, வேலைத் தளத்தில் நாசங்கள் மற்றும் எதிரிகளின் நாசங்களையும் எதிர்பார்க்கலாம். சொந்த பந்த விரோதங்கள் வேறு வரலாம். பொருள் நன்மையுண்டு எனினும் பலவிதத்திலும் துன்பம், உடல், மற்றும் மன நிலையும் காணப்படலாம்.

கன்னி – வெளியூர்ப் பயணம், அலைதல், அதிகப் பிரயாசைக்கு உள்ளாகுதல் ஆகியவை தோன்றும். குடும்பத் துணைச்சரவு ஏற்படினும், நற்குணத்தினால் வயதுக்கு மூத்தவர்களின் மதிப்பும், மரியாதையும், குடும்ப ஆதரவும் உண்டு. பிரயாசை காரணமாக நோய்களிற்கும் உள்ளாகலாம்.

துலாபம் (துலாம்) –  வருமானம் வரும்,  ஆயினும் வாக்குச் சண்டை சச்சரவுகளும், மதிப்புக் குறைதலுக்கும் உள்ளாகலாம். குடும்பத் தொந்தரவுகள் உண்டு. உணவு, நித்திரை விருத்தியடைய வாய்ப்புண்டு. முக்கியமாக எதிரிகள் இடையூறு, பயங்களினால் ஆத்திரம் உண்டாகலாம். ஆயினும் சினத்தைக் குறைந்து ஆறுவதும் நலம். காரணம்  இம்மாதம் உடல் நலம் குன்றுதலில் இருந்து மீளஉதவும்.

விருச்சிகம் – நினைத்த விடயம் சித்தியாகும். வேண்டிய பொருட்களின் உபயோகமின்மை, பொருள் இழப்பு, சேதம் ஆகியவற்றை  எதிர்பார்க்கலாம். இந்த மாதம் எதிரிகளை வெல்லலாம், ஆயினும் பிரயாசப்பட்டு முயற்சி செய்த விடயங்கள் எதிர்பார்த்த அளவு பயன்தராமலும் போகலாம். முக்கியமாக வருமான இலாபம் இல்லாது போகலாம்.

தனுர் – நண்பர்களால் உதவி, உடல்நிலை குன்றலாம். புதிய முயற்சி, காரியம் கைகூடும். பொதுவான சிந்திப்பதில் சற்று மந்தமான நிலை, இடைவெளியில்லாமல் தொல்லை, கவலைகளுண்டு. எடுத்த முடிவுகளால் பண, பொருள் நட்டங்களும் ஏற்படலாம்.

மகரம் –  வேலையாற்றலில் குறைந்து, தாழ்ந்த நிலையில் காணப்படுதல். தொழில் முடக்கத்தினாலும், மரியாதைக் குறைவு. குடும்பத்தார்,இனசனத்தார் முரண்பாடுகளும், பிரயாணம் பற்றிய கவலைகளும் உண்டாகலாம். உபகரணங்களில் கவனம் தேவை, ஆயுதங்களினால் தொல்லையோ, சச்சரவையோ எதிர்கொள்ளலாம்.

கும்பம் – ஏற்கனவே செய்த முயற்சிகளினால் காரிய வெற்றி, பொதுவாக உயரந்த மனநிலை. இந்த மாதம் வாய்மொழியால் மற்றவர்களைக் கவரலாம். ஆயினும் உடல் மந்த நிலை, உடல் வெப்பம் அதிகரித்தல் மற்று திருடர் தலையிடியும் உண்டாகலாம். செலவுகளும் நடைமுறையிலும் அதிகமாகும்.

மீனம் – பெண், பொருள் சுகம். பொருட்கள் இவ்விடம் நகை நட்டு,புதிய வாகனக் கொள்வனவு போன்றவையாக இருக்கலாம். பிள்ளைகள், வேலைத்தளத் தலையிடிகளையும் சமாளிக்கவேண்டியதாகவும் ஆகலாம்.

  • பனிப்பூக்களின் பரிட்சார்த்தத் தொகுப்பு (ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad