\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காகிதத்தின் வாக்குமூலம்

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments

paper-poem_620x420எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!

வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!

தன்னைக் கிழித்தாலும் ;
பழித்தாலும் ;
போற்றினாலும் ; ஒன்றாகவே
பாவிப்பவன் எவனோ ….
அவனே
காகிதம் …!!!

தனக்கு நிகர் தானே …
என நினைப்பவன் ….
எவனோ…. அவனே
காகிதம்…!!!

கவிதைகளின் பிறப்பிடமாகவும் ,
கதாசிரியர்களின் உறைவிடமாகவும் ,
எழுத்தாளர்களின் பிறப்பிடமாகவும் ,
ஓவியர்களின் சிந்தனைக் களமாகவும்,
மாணக்கர்களின் ஆசானாகவும் ,
சிந்தனையாளர்களின் பாசறையாகவும் ,
இருப்பவன் ….எவனோ ….அவனே….

காகிதம்!!!!

உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad