\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உன்னிமேனனுடன் உரையாடல்

Filed in அன்றாடம், பேட்டி by on November 30, 2015 0 Comments

Unni-Interview_1_620x668கேள்வி: நீங்க மூவாயிரத்துக்கும் மேல பாடல்கள்  பாடி இருக்கீங்க. இதுல பாடாத பகுப்புகள் (Genre) ஏதாவது இருக்கா?

பதில்: நிறைய இருக்கு. இசைல அதன் பகுப்புகளுக்கு அளவே  கிடையாது. அதுவும், இப்ப நாம உலகிலுள்ள பல இசைகளைக் கேட்கிறோம். சாட்டிலைட் சேனல்ஸ், சோஷியல் மீடியா வழியா  பல வகை இசையைக் கேட்கிறோம். இன்னும் நிறைய பாட ஆர்வமா இருக்கேன்.

இந்த மூவாயிரம் பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளேன். இது மட்டும் இல்லாமல், பக்தி  பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் பலவும் செய்திருக்கிறேன்.

கேள்வி: நீங்க பாடகர் மட்டும் இல்ல, தொலைகாட்சிகளில் பாடகர் தெரிவு போட்டிகளில்  நடுவராகவும் இருந்திருக்கீங்க. உங்களது இளவயதில் கல்லூரியில். படிக்கும்பொழுது  பாடிப் பல பரிசுகளை வாங்கியிருக்கீங்க. இப்ப இருக்கிற பாடகர்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: அவர்கள் வளர்ச்சியைப் பார்த்து பெரிதும் சந்தோஷப்படுகிறேன். அந்தக் காலத்தில் இந்த மாதிரி சந்தர்ப்பம் எல்லாம் கிடையாது. ஐம்பது பாடல்கள் பாடினப்புறம் தான் மக்களுக்கு எங்க பேரு வெளியில் தெரியும். இப்ப இருக்கிற பாடகர்கள் எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். நல்ல பாடல் ஒன்று பாடினாலே ஒரே இரவில் உலகத்துக்கே தெரிகிறது. நாங்க பாடும் பொழுது மக்களால் உடனடியா பார்க்க முடியவில்லை. ஊடகங்கள் இவ்வளவு பலமாக இல்லை. இது ஒரு பெரிய வித்தியாசம். அந்த வகையில் இப்ப இருக்கிற பாடகர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

கேள்வி: இசையமைப்பாளர்களும் இப்ப மாறி வராங்க. உன்னிகிருஷ்ணன், நீங்க எல்லாம் மெலடி பாட்டு பாடினீங்க. மாலதி அவர்கள் குத்துப்பாட்டு பாடுவாங்க. புது பாடகர்கள் எல்லா விதமான பாடல்களும் பாடறாங்களே.

பதில்: நாங்க பாடும் பொழுது இருந்த இசை அமைப்பாளர்கள் மிகப் பெரிய மேதாவிகள். அவர்கள் இப்போ நம்மோட இல்லாம இருந்தாலும் அவர்கள் இசையால் நம்மோடு இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஜேசுதாஸ், SPB, சுசிலா அம்மா, s. ஜானகி, TMS எல்லாம் ரொம்ப அதிர்ஷ்டசாலிகள். சிறந்த பாடல் ஆசிரியர்கள், சிறந்த இசை அமைப்பாளர்களிடம்   பாடின காலம் அது. நேற்று நடந்த கச்சேரியில் கூட நான் பழைய பாடல்கள் பாடினேன். இந்த காலத்து இளைஞர்களும் அந்தப் பாடல்களைத்தான் விரும்புகிறார்கள். இப்ப இருக்கிற பாடகர்கள் அந்த வாய்ப்பை மிஸ் பண்றாங்க.

கேள்வி: இப்ப உள்ள பாட்டுல Digital processing பண்ணி ரெகார்ட் பண்றாங்க. அதை மேடைல எப்படி பாட முடியும்?

பதில்: கண்டிப்பா பாட முடியாது. Remix பண்ணதைக் கூட ஒரு அளவுக்கு தான் பாடமுடியும். என்ன பண்ணாலும் மேடைல அந்த கிம்மிக்ஸ்களைப் பண்ண முடியாது. நேரடியா பாடித்தான் மக்கள் மனதை கவரமுடியும். அதனாலத் தான் மேடைல நல்லா பாடறவங்க இன்னமும் பிரபலமா இருக்காங்க. SPB இதுக்கு ஒரு பெரிய உதாரணம். அவரும் உஷா உதுப் எல்லாம் மேடைல நின்னபடியே ஜனங்களை டான்ஸ் ஆட வைப்பாங்க.

Unni-Interview_2_620x668கேள்வி: நீங்க பாடினதில மக்களுக்குப் பிடிச்ச பாட்டு எல்லாம் தெரியும். நீங்க பாடின பாடல்களில்  உங்களுக்குப் பிடிச்ச பாட்டு எது?

பதில்: எனக்கு ”கண்ணுக்கு மை அழகு” ரொம்ப பிடிக்கும். ரொம்ப எளிமையான வரிகள் மற்றும் மக்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. பூங்காற்றிலே என் சுவாசத்தை பாட்டும்  ரொம்ப பிடிக்கும். A.R. ரஹ்மான் இசையில் 25 – 30 பாடல்கள் பாடியிருக்கேன். அதுல எனக்கு இந்த ரெண்டு பாட்டும் பிடிக்கும். “புது வெள்ளை மழை”பாட்டும் ரொம்ப பிடிக்கும். எனக்கு அது ஒரு பெரிய ப்ரேக் குடுத்தது.

கேள்வி: நீங்க புதுப்பாட்டுக்கு எப்படித் தயார் பண்ணிக்கறீங்க? கச்சேரிக்கு எப்படி தயார் பண்ணுவீங்க? மத்த பாடகர்களெல்லாம் வரிகளைப் பாத்து பாடறாங்க, நீங்க அப்படியெல்லாம் எதையுமே பாக்காம பாடறீங்களே. எப்படி?.

பதில்: எனக்கு 4000 பாடல்கள் மனப்பாடமாத் தெரியும். அதனால மக்களைப் பார்த்து பாட எளிமையா இருக்கு. எதையும் பார்த்து பாடவேண்டிய அவசியம் இல்ல. புதுப் பாட்டுன்னு வரும்பொழுது, அந்த பாட்டு எந்த சூழ்நிலையில் பாடறாங்கன்னு பார்க்கணும். அந்த பாட்டைப் விஷுவலைஸ் பண்ணி பார்க்கணும். ஒரு பாடகனுக்கு நல்ல கற்பனை தேவை. இந்தப் பாட்டு படமா எடுத்தா எப்படி இருக்கும்? அதைத் தெரிந்து பாடக்கூடிய பாடகன் தான் வெற்றி அடைவான். சும்மா டியூனை மட்டும் கேட்டு பாடினா அது சரியா வராது. நல்ல முயற்சி எடுத்துப் பாடின பாடல்கள் மேடைல பாடும்பொழுது  ரொம்ப பரிச்சயமா இருக்கும். எங்களுக்கு இரண்டு மணி நேரம் தான் இருக்கும் பாட்டைப் படிச்சி பாடறதுக்கு. முன்ன எல்லாம் MGR, சிவாஜி எல்லாம் ரெகார்டிங்குக்கு வருவாங்க. இப்பல்லாம் யாரும் வரதில்ல. சில நேரத்துல, இசை அமைப்பாளரே வரதில்லை . டியூன் மட்டும் கொடுத்துட்டுப் போய்டுவாங்க.

கேள்வி: இப்ப எல்லாம் ஹீரோவே பாடறாங்க, அதப் பத்தி உங்க கருத்து?

பதில்: பாடறது யாருக்கும் ஏகபோகம் இல்லை. அவங்க நல்லா பாடினாங்கனா தாராளமா பாடட்டுமே. சில பேரு நீங்க எதுக்குப் பாடறீங்கன்னு கேக்கறாங்க.அவங்களால பாட முடிஞ்சா பாடட்டுமே. இந்த விஷயத்துல நான் பெரிய மனது கொண்டவன். இப்ப நடிகர்கள் சரியா பாடலைன்னா அதை டியூன் பண்ண சாஃப்ட்வேர் எல்லாம் இருக்கு. மெலோடைன் வச்சி அவங்க குரலைச் சரி செய்யலாம். நடிகர்கள் எல்லாம் பாடினாலும் அது எவ்வளவு நாள் நிக்கும்னு சொல்ல முடியாது. அதுமட்டும் இல்ல, அந்தப் பாட்டை அவங்க மேடைல பாடினாங்கனா சரியா இருக்காது.

கேள்வி: மெலடி பாட்டு ரொம்ப குறைவா தான் வருது. மெலடி பாட்டுக்கு எதிர்காலம் எப்படி இருக்கு? நீங்க சொன்ன மாதிரி முன்ன இருந்த மாதிரி இசை அமைப்பாளர்கள் இப்போ இல்ல.

பதில்: மெலடிக்கு எதிர்காலம் நல்ல பிரகாசமா இருக்கு. எவ்வளவு விதமான பாடல்கள் வந்தாலும் ஒரு மெலடி பாட்டு இருந்தா அதுதான் மக்கள் மனதில் நிக்கும். மெலடி பாட்டுக்கு அழிவே இல்ல. மியுசிக்ல, M  என்ற வார்த்தை மெலடியைக் குறிக்குது. அது போய்ட்டா அவ்வளவு தான்.

கேள்வி: நீங்க நிறைய மொழிகள்ல பாடியிருக்கேன்னு சொன்னீங்க. தெரியாத மொழில எப்படி பாடமுடியுது?

பதில்: நான் ஒரு மலையாளி. எனக்கு இது ஒரு சாதகமாவே அமைஞ்சிருச்சு. மத்த மொழியவிட மலையாளத்துல நிறைய எழுத்துக்கள் இருக்கு. உச்சரிப்புக்கு ரொம்ப கடினமான மொழி மலையாளம். அதனால எந்த மொழில பாட்டு பாடணும்னாலும் எளிமையா பாடிடலாம்.

எந்த மொழிப் பாட்டையும் சரியா எழுதி அதைச் சரியான உச்சரிப்போட பாடலாம். SPB ஒரு தடவை சொல்லிருக்காரு, எல்லா மொழியிலேயும் பாடிடுவேன் ஆனா மலையாளத்துல மட்டும் பாடறது கஷ்டம்.

கேள்வி: உங்க குரலை எப்படிப் பராமரிக்கறீங்க?

பதில்: நாங்க பாடறதுக்கு ஊரு ஊரா போகிறோம். வெவ்வேறு timezone வெவ்வேறு சாப்பாடு. நம்ம குரல் கெடாம இருக்கணும்னா சாப்பாடு தான் காரணம். காரம், எண்ணை இதெல்லாம் சேர்க்காம தரமான சாப்பாட்டைச் சாப்பிட்டா குரல் வளம் நல்லாயிருக்கும். அதுவும் ஊரு ஊரா பயணம் செய்யும் பொழுது அது குரலுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கும். மேற்கத்தியப் பாடகர்கள் எல்லாம் மாதத்திற்கு ஒரு கச்சேரி தான் செய்வாங்க. எங்களால அப்படி செய்யமுடியாது. அமெரிக்காவிற்கு வந்தா பல கச்சேரிகள் செய்ய வேண்டியிருக்கு. அது குரலுக்கு ரொம்ப சிரமம் தருது.

   பிரபு ராவ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad