\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

யார் அந்த இராவணன் பகுதி – 3

Filed in இலக்கியம், கட்டுரை by on December 27, 2015 0 Comments

ravanan_620x829(பகுதி – 2)

இராவணன் எப்படி அரக்கன் ஆக்கப்பட்டான்

இராவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்றும் பேரழகன் என்றும் பொருள் உண்டு. “இரா”  என்றால்இருள்அல்லதுகருமைஎன்பது பொருளாகும். இருள் போன்ற கரிய நிறத்தினை உடையவனாதலால் இராவணன் (இராவண்ணன்) என அழைக்கப் பட்டான். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். கதைக்காகத் தமிழ் அரசனான இராவணனை அப்படிக் காட்டியிருந்தாலும் அவனின் வீரம் என்றுமே போற்றுதலுக்குறியது. மாற்றான் தோட்டத்து மல்லிகையான சீதையைத் தன் கை படாது வைத்திருந்த கண்ணியவான். தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன். ஆனால் வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான்.

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், சிறந்த சிவபக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப் படுகிறான். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாகச் சித்தரிக்கப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. உண்மையில் இராவணன் வைத்திருந்தது புஷ்பக விமானம்தானா என்பதில் சந்தேகம் உள்ளது. கோவில் மூலஸ்தானத்தின் மேலே உள்ள கூரைப் பகுதியை விமானம் என்றுதான் நாம் அழைக்கிறோம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூரையை உடைய சிம்மாசனத்தைப் புஷ்பக விமானம் என்று வால்மீகி வர்ணித்திருக்கவும் வாய்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது.

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன் என்பதை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது.

இராவணன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான வாழ்க்கை நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் குறிப்பிடுகின்றது.

ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் தன் கற்பனை வளத்தால் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்று சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான்.

இன்னும் வளரும்…

-தியா-

துணை நூல்கள்/ Reference Books

  1. Arya Chakravarties of Tamil Eelam; M.D.Raghavan; In Tamil Culture in

Ceylon, Kalai Nilayam Press – 1946.

  1. Matrimonial Alliances between Tamilnad and the Sinhalese Royal Family

in the 18th Century – January 1974, Jaffna, Tamil Eelam

  1. Tamil Rulers of the Kandyan Kingdom; G.Amirthalingam

London, 4 March 2006

  1. The Tamil Kingdom in Jaffna –Early Beginnings to the Court of the

Ariya Chakravartis; Dr.H.W.Tambiah; January 1968, Madras, Tamil Nadu

  1. https://kallarperavai.weebly.com/ கட்டுரை வேத வித்தகன்

இராவணன்”  அக்கினி புத்திரன்

இன்னும் வளரும்

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad