\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on December 27, 2015 0 Comments

astro-square620x620(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது)

தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் டிசம்பர்  சனவரி

மேடம் (மேஷம்)  – பலவிதப் பொருட்கள் வருகை, மற்றும் காரியங்களில் வெற்றிகள் மாதக் கடைசியில் வரலாம். வேலைத்தள இடையூறுகள் ஏற்படலாம். ஆரம்பிக்கும் கருமங்களில் தடைகள் ஏற்படலாம், உடல் ஆரோக்கியம் குன்றுதல். அவதானம் தேவை வயிற்றில் கோளாறுகள் வரலாம். பண்டிகை காலமெனினும் உணவு உட்கொள்ளல் குறைந்த நிலை.

இடபம் (ரிஷபம்) –  இம்மாதம் முக்கியமாக வாழ்க்கைச் சமநிலையில் காணப்படும். வேலை செய்பவர்களால் எதிர்ப்பார்க்காத இடைஞ்சல்கள் வரலாம். பிள்ளைகள் மகிழ்ச்சியைத் தருவர். அவசியமற்ற அச்சங்களில் இருந்து விடுதலை. வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். தொற்று நோய்கள் பெண்களால் வர வாய்ப்புண்டு.

மிதுனம் – பிரதானமாக இம்மாதம் அவமானம் ஏற்படுதலை வேண்டியளவு தவிர்த்துக் கொள்ளவும். இது சந்தோசத்தையும், உடன் வேலைசெய்யும் வேலைத்தலத்தில் நற்பெயரையும்,சினேகிதத்தையும் தரலாம். தேவையில்லாத அச்சங்களும், அசௌகரியப் பிரயாணங்களையும் எதிர்கொள்ளலாம். உடல்நிலை குன்ற வாய்ப்புண்டு. துர் செயல்களின் மூலம் இடையூறுகள் வரலாம்.

கர்க்கடகம் (கடகம்) – பணம் பொருள் வருகினும், செய் தொழிலில் இடையூறுகள் ஏற்படலாம். உற்றார் உறவினர் தொந்தரவுகளையும், பலவிதமான மனச் சோகங்களையும், தாழ்வுற்ற மனப்பாங்கையும் எதிர்நோக்கலாம். உடலின் இரத்தம் சிந்துதல் ஏற்படலாம், பிரதானமாகக் கைகளை அவதானமாகப் பாவித்துக் கொள்ளவும். மாத இறுதியில் நற்பேறுகளும் வரலாம்.

சிங்கம் (சிம்மம்) – உடல் சுகம் பெறும், உடுக்கும் துணிமணி, போர்க்கும் அணிகள் என பலவற்றையும் பெறலாம். மேலும் வருமான பயன்களையும் எதிர்பார்க்கலாம். குடும்ப ரீதியிலும், உணவு ரீதியிலும் ஆதாயங்கள் வரும். கண் உட்பட்ட கோளாறுகள் வரலாம். உபயோகமற்ற பலகாரியங்களுக்கும் இம்மாதம் உட்படலாம்.

கன்னி – வேலை அதிகாரத்துறையில் வெற்றிகள் வரலாம். ஆயினும் சிந்தித்து செயற்படும் தன்மை குறைந்தும் காணலாம். மகளிராலும், பணரீதியிலும் ஆதயங்கள் வரலாம். எனினும் அவமதிப்பும் உடல் சுகயீனமும் வரலாம். பிரதானமாகப் பித்தநீர் அதிகரிப்பினால் தலை சுற்றல் போன்ற தன்மைகளை எதிர்கொள்ளலாம்.

துலாபம் (துலாம்) –  ஆத்திரம் தணிக்க வேண்டிய மாதமிது. தேவையற்ற சண்டை சச்சரவுகளினால் வாழ்க்கைத் துணையுடன் மனத்துயரம் வரலாம். சொந்தக்காரர் உடன் தொந்தரவுகளும் வரலாம். உடல் சுகக்குறைவுகள், இதனாலும் மனத்தாழ்வுகளும், விரக்தியும் ஏற்படலாம். ஆயினும் நிதானமாக அணுகுபவர்களுக்கு இறுதியில் நன்மதிப்பும் வரவாய்ப்புண்டு.

விருச்சிகம் – குடும்பத் தொந்தரவுகள் சற்று அதிகமாகலாம். வாழ்க்கையில், வேலைத்தளத்தில் புதிய இடத்திற்கு வரவாய்ப்புண்டு. பணவருகையும் உண்டாகும். மனநிலையில் தனிமை சற்று வாட்டினும், உண்பதில் சுகங்கள் கிடைக்கும். சிந்தித்து செயல்படுதல் இம்மாதம் அவசியம். கை,கண்களையும் சற்றுப் பாதுகாத்தல் நலம்.

தனு – இருக்கும் வாழ்க்கை நிலையில் மாற்றங்கள், பிரிவுகள் ஏற்படலாம். கைக்கருமங்களில் சோம்பல், உடல்நிலை குன்றுதல் ஏற்படலாம். உழைப்பு வருமானம் கைகூடும். சொந்தபந்தத் தொடர்புகளில் குறைதல் ஏற்படும்.

மகரம் –  வேலையில் சந்தோசங்களும், பொருட்கள் வருகையும் உயரும். உடல் நிலையில் அவதானம் தேவை. இம்மாதம் உடலில் வயிறு,நெஞ்சுக் கோளாறுகள், மற்றும் வியாதிகள் வர வாய்ப்புண்டு. மரியாதை குறையவும் வாய்ப்புண்டு. பிள்ளைகளின் சுகங்கள் மகிழ்ச்சி தரும்.

கும்பம் – செய்யும் தொழிலைப் பொறுத்தளவில் மாற்றமில்லை. ஆயினும் நடைமுறை வாழ்க்கையில் தொந்தரவுகள் சில. மேலும் உங்கள் அன்பினால் சொந்தபந்த வாக்குவாதம். உடமைகள் பாதிப்பும் ஏற்படலாம். இம்மாதம் உங்கள் தலையாய தலையிடி பல வகையிலும் மற்றவர்களிடம் குறை கேட்டல்.

மீனம் – பணவரவு ஏற்படும் செய்யும் தொழிலில் மேம்பாடுகள் ஊதியமாகவும், பெருமையாகவும் வர சந்தர்பங்கள் உண்டு.  சிலர் தேவையற்ற மனப்பயத்திற்கு உள்ளாகலாம். செய்யும் தொழிநுட்பங்களில் அனுவசாலியாக அறியப்படவும், உயர் நிலை அடையவும் முடியும். வேலைத்தல சந்தோசங்கள் பல. ஆயினும் உடமைகளில் பாதிக்கப்படாமலும் பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

  •        பனிப்பூக்களின் பரிட்சார்த்தத் தொகுப்பு (ஆசிரியர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad