கலிஃபோர்னியா பாரதியார் பிறந்தநாள் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு,
பாரதி தமிழ்ச் சங்கம் பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் மாதத்தில் Milpitas Shridi Sai கோயிலில் நடத்தியது.
இது சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் நடை பெற்றது. இந்தக் கட்டுரை, இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு சிறு குறிப்பே.
முதலில் திரு முரளி ஜம்பு முன்னுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, திரு.
வெங்கடேஷ்பாபு நிகழ்ச்சியைத் தொடக்கவைத்தார்.
முரளி , வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி ஆரம்பித்து, அன்று நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை வரிசைப் படுத்திச் சொல்லி விட்டு பின் பாரதி தமழ்ச் சங்கம் ஏன், எதனால் தொடங்கப்டடது என்பதை எடுத்துச் சொன்னார்.
திரு முரளி பாரதி தமிழ்ச் சங்கம் குறித்து இவ்வாறு பேசினார்.
பாரதி தமிழ்ச் சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு.
பாரதி தமிழ்ச் சங்கம் இந்தியாவின் கலாசாரச் செழுமையையும் அதன் தொன்மையான அங்கமான தமிழின் சிறப்பையும் உலகத் தமிழ் மக்களைப் பெருமிதத்துடன் ஒன்றிணைக்கும் உன்னதக் கூறுகளாக மதிக்கிறது,
“ஊருக்கு உழைத்திடல் யோகம்” என்ற பாரதியின் மொழிக்கிணங்க பாரதி தமிழ்ச் சங்கம் தன்னார்வல சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் பங்கெடுக்கும்.
மேற்சொன்ன அடிப்படைக்கூறுகளை வலுப்படுத்தும் வகையில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் பாரதி தமிழ்ச் சங்கம் இணைந்து இயங்கும்.
இந்த சேவையில் ஒன்று தான் சென்னையின் சமீபத்திய வெள்ள நிவாரணத்திற்கான நிதி திரட்டுதல் பணியாகும். இதற்காக, வருகிற ஜனவரி 24 ஆம் திகதி பாரதி சங்கம் நடத்த விருக்கும் நாட்டிய நிகழ்ச்சியைப் (NATYA MELA) பற்றிக் குறிப்பிட்டார்.
திரு. முரளியின் பேச்சிற்குப் பிறகு, திருமதி சுசி அன்னசாமி ஒருங்கிணைப்பாளரகத் தன் பணியைத் தொடர்ந்தார். குழந்தைகளுக்கான ஓவிய போட்டி ஒன்று நடைபெற்றது.
பாரதப் பண்பாட்டின் முக்கிய அங்கமான தமிழரின் கலை, இலக்கியம், இந்து ஆன்மீகம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இளைய சந்ததியினரின் – குறிப்பாகத் தமிழ்க் குழந்தைகளின் – மனதில் பதிய வைக்க பாரதி தமிழ்ச் சங்கம் பல செயல் திட்டங்களை மேற்கொள்ளும். இயல், இசை, நாடகம், நாட்டியம் உள்ளிட்ட பல தனித் திறமைகளையும் படைப்புத் திறன்களையும் வெளிச்சம் போட்டுக் காட்ட, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பாரதி தமிழ்ச் சங்கம் அரங்கம் ஏற்படுத்தித் தரும் என்று பலவிதமாக உணர்த்தப்பட்டது.
நிகழ்ச்சியில் செல்வி. ஸ்வேதா ரவிசங்கர் பரதநாட்டியம் நடை பெற்றது.
திரு ராம் அவர்கள் திரு மணி அவர்களை அறிமுகம் செய்தார் .
திருமதி நித்தியவதி அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அறிவித்து அறிமுகப் படுத்தினார்.
திருமதி கௌரி, திருமதி உஷா அரவிந்தன் உதவியுடன், ஷாஸ்தா ஃபூட்ஸ் (Shasta Foods) உரிமையாளர் திரு. மணி அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
-முரளி ஜம்புநாதன்