மழைத் துளிகள்
விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!
மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?
நீ என்னை வேண்டித்
தொழுததை மறந்தாயோ
மானிடா?
வானம் பொழிகிறது .
விதைத்தவன் உவகை கொள்ளவில்லை.
வானம் பொய்த்தது …
விதைத்தவன் அகமகிழவில்லை
அந்தோ பரிதாபம் !!!
வானம் அழுகிறது……
தண்ணீரை எதிர்பார்த்தவன்
கண்ணீரை ஏந்தினான்
கண்ணீரை ஏந்திய மண்…..
சிரிக்கிறது…..!!!
வானம் அழுதால் ….
மானிடன் என்று
சிரிப்பானோ…
அன்று வர எத்தனித்து
இன்று மழை
பிரியாவிடை
பெற்றுச் சென்றது !!!
விவசாயி :
மழை
நீ வருவாய் என…..
என்றும்
உனை மறவாத நான் !!!
ஆணவம்
கொடிய அரக்கன் !!
சாலையில் கிடக்கிறது
சல்லி சல்லியாய் ….
மலையின் ஆணவம் !!!
சென்னையில்
சாலையில் மக்களுக்குப் பதில்
தாரை தாரையாக …..
மழையின் ஆணவம் !!!
மழையின் ஆணவத்தால்
ஸ்தம்பித்தது
சென்னை ….!!!
ஆணவம் உள்ளவன்
வாழ்வின்
உயரங்களைத் தொட்டதாக
வரலாறு இல்லை !!!
உமா.