\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மழலை

Filed in இலக்கியம், கவிதை by on January 31, 2016 1 Comment

மழலை1நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !

பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !

உன்னதத் தளிரின்
உச்சி முகர்கையில்
உலகம் முழுவதும்
உள்ளங்கை அடங்குதன்றோ !

அழகுப் பதுமையாய்
அருகினில் நெருங்கையில்
அண்டம் முழுவதும்
அணுவாய்ச் சுருங்குதன்றோ !

செதுக்கிய சிலையாய்
செழுமையாய்ச் சிரிக்கையில்
செருக்கால் சிரமும்
செம்மாந்து நிற்குதன்றோ !

பொக்கை வாய்திறந்து
பொழியும் மலர்ச்சியினில்
பொங்கிய இன்பத்தால்
பொன்போல ஒளிர்ந்ததன்றோ !

ஆயிரம் இன்பங்கள்
ஆண்டவன் தந்தாலும்
ஆங்கொரு மழலையின்
ஆளுமைக்கு அவைநிகரோ !!!

வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. M K RAMMOHAN says:

    very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad