\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கன்னியும் காதலியும் !

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments

kanniyum-kaathaliyum_620x253கருணை இல்லாத
காட்டுமிராண்டி
நாட்டுக்குள்ளே
புகுந்தது போல்
விம்மி நிற்கும்
விரதாபம் !

உள்ளே பதுங்கும்
வெண்புலியாய்
அவனது
விரகதாபம் !

மழைத் தூறல்கள்
பூமிக்கும் வானுக்கும்
ஏணி அமைக்க,,,
மலர்க் கூட்டமோ
மகரந்தம் சொரிய…
மாதங்களில் முன்னே
ஓடி வந்து நிற்கும்
மார்கழி மாதம்!

படுக்கையில்
மலர் மெத்தை
காலியாகக்
கிடக்கும்போது
அவனுக்கு உலகமே
பகல் கனவு !

இப்போது
மஞ்சத்தில்
மலர் ஒன்று
இதழ் விரிக்கிறது !

உடனே ஓடி வந்து
அவன்
பதுங்கிக் கொள்ள
ஆசைப்படுகிறான் .
ஓர் கன்னியின்
காதல் மொழிகள்
பேசும் கருவிழிகளிலே !

இன்று அவள்கன்னியாக இருப்பவள்
நாளை அவனுக்குக்
காதலியாகி விடுவாள் !

பூ. சுப்ரமணியன்,

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad