\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வெங்காயத் தண்டு வறை

Filed in அன்றாடம், சமையல் by on February 28, 2016 1 Comment

venkaya_varai_620x620நாம் வட அமெரிக்காவில் பனிதாண்டி இளவெயினில் காலத்தைப் பற்றிக் கனவு காண ஆரம்பிக்கவிருக்கும் இத்தருணத்தில் வந்துள்ள தடுமன் காய்ச்சல்களில் இருந்து சற்று நிவாரணம் தர வெங்காயத் தண்டு வறை உதவியாகவிருக்கும். தற்போது உள்ளூர் மளிகைக்கடைகளில் வெங்காயத் தண்டுகள் கிடைக்கத் தொடங்கும்.

தேவையானவை

½ lbs தளிர் வெங்காயத் தண்டுகள்

1 மேசைக்கரண்டி நறுக்கிய சிறுவெங்காயம்

1 தேக்கரண்டி வெண்சீரகம்

¼ கோப்பை துருவிய தேங்காய்ப்பூ

2 துண்டாக்கிய உலர்ந்த செத்தல் மிளகாய்

2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்

கடல் உப்பு தேவையான அளவு

செய்முறை

வெங்காயத் தண்டுகளை நன்கு கழுவி உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் தேங்காய்ப் பூவுடன் மிருதுவாகக் கலந்து கொள்ளவும்.

அடுத்து வாணலி அல்லது அகன்ற பாத்திரத்தில் நறுக்கிய சின்ன வெங்காயத்தையும், செத்தல் மிளகாய்த் துண்டுகளையும் எண்ணெயில் பொரிக்கவும். வெங்காயம் சற்று மண்ணிறமாகியதும் வெண் சீரகத்தைப் போட்டுத் தொடர்ந்து அரை நிமிடம் தாளிக்கவும்.

அடுத்து வெங்காயத் தண்டுக் கலவையைப் போட்டுக் கூட்டி 5 நிமிடங்கள் வரை வறுத்து, பிறகு இறக்கிச் சூடான சோற்றுடன் பரிமாறலாம்.

  • யோகி அருமைநாயகம்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Balamani says:

    வெண்சீரகம் என்றால் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad