\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மின்வலை இணைய நடுத்துவம் பேணல் (Net Neutrality)

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2016 0 Comments

netnuetrality_620x496

மின்வலை இணைய நடுத்துவம் பேணல் Net Neutrality

உங்கள் கைத்தொலைபேசியில், கணனியில் ஓடும் படம் சற்று வேகம் குறைந்து காணப்படுகிறதா? சிலசமயம் ஒட்டு மொத்தமாக இணைப்புத் துண்டிக்கப் பட்டு விட்டதா? அது பற்றி எவ்வளவு தூரம் சிந்தித்திருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? அனேகமாக நாம் அதை பொருட்படுத்தாமல் மீழ படத்தைப் பார்க்க முனைவோம் என்பதே பொதுவான பதில்.

ஆயினும் நீங்கள் பார்க்கும் படம் பற்றிய தகவலைப் பின்னணியில் ஒரு கணனியில் இருந்து மற்றய கணனிக்குப் பரிமாற பல கொடுக்கல் வாங்கல்கள் ஒவ்வொரு நாழியிலும் நடைபெற்றவாறுள்ளன. இந்த மின்னியல் தகவல் பரிமாற்றங்கள் அரசுகளால் அங்கீகாரம் பெற்ற வர்த்தக தொடர்புதாபனங்கள் பின்னணியில் செய்கின்றன. இந்தத் தாபனங்களை அரசு அங்கீகரித்துத் தொழிற்பட விட்டதே அவை தொலைத்தொடர்பு பரிபாலன சேவைக்கு வருமானம் வசூலிக்கும் அதே சமயம் பொதுச் சொத்தாகிய மின் வலை அதன் இணைப்புக்கள் யாவும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே. ஆயினும் இந்த வர்த்தக தாபனங்களுக்கு அவற்றின் ஆசை பேராசையாகிறது. தமக்கென அரசுகள் அனுமதித்த சலுகைகளை மறந்து காட்டாறாக வருடாவருடம் அதிகரித்து ஓடும் மின்வலைத் தகவல்களுக்கு ஏதாவது வகையில் மடக்கி,முடக்கி, அணை கட்டி, மடை போட்டு மென்மேலும் இலாபத்தைத் தமக்கு உண்டு பண்ண முடியுமா என சிந்திக்கின்றன.

இவ்விடத்திலேயே பொது மக்கள் சார்பிலும், சிறிய மின்வலயத்தை நம்பியிருக்கும் தாபனங்களையும், சேவைகளின் விலை திடீர் அதிகரிப்பு, மற்றும் பெரிய தாபனங்கள் சிறியவற்றை நசுக்குதல் போன்ற வர்த்தக ஊழல்களில் இருந்து காக்குமுகமாகவே மின்வலய இணைய சமத்துவம் Net Neutrality என்ற கொள்கை உருவாகியுள்ளது. அமெரிக்காவில் ஏறத்தாழ ஒரு தாசாப்த்தமாகவும், ஐரோப்பாவில் 5 வருடங்களுக்கு மேலாகவும் அண்மையில் இந்தியாவிலும் மின்வலை இணைய நடுத்துவம் Net Neutrality செய்திகளில் முன்னணி வகிக்கின்றது. மின் வலய நடுத்தவம் சட்டரீதியல் பல நுணுக்கங்களையும் கொண்டுள்ளது, இவ்விடம் இந்த விடயத்தைச் சற்று மேலோட்டமாக ஆராய்ந்து பார்ப்போம்.

மின்வலய இணைய நடுத்துவம் பேணல் என்றால் என்ன?

தகவல் பரிமாற்று மின்வலய இணையத்தில் நடுத்துவம் பேணல் என்பது, தகவல் பரிமாற்று இணைப்புக்கள் யாவும் என்றும் சுதந்திரமானதாகவும் இது வித முட்டுக்கட்டக்களும் இல்லாது இருக்க வேண்டும் என்பதே. இதை இன்னொரு முறையில் விவரிப்பதாயின் எது விதவித தொலைதொடர்பு வர்த்தக தாபனங்களோ, இல்லை மின்வலய விளம்பரத் தாபனங்களின் கைக்குள் சுதந்திரமாகப் பரிமாறப்படும் மின்வலய இலத்திரனியல் தகவல்கள் கைப்பற்றப்பட்டு வர்த்தக ரீதியில் பாரபட்சம் பார்த்துப் பரிமாறதலைத் தடைசெய்யதல்.

உதாரணமாக உங்களுக்கு வரும் முக்கியமான மின்னஞ்சல் வர்த்தக ரீதியில் ஆதாயம் முக்கியத்துவம் இல்லாவிட்டால், AT&T, Verizon, Comcast போன்ற வர்த்தக தொடர்பு இணையங்கள் வேண்டுமென்றே பிந்தி உங்கள் தகவலை அனுப்பி வைக்கலாம்.

மின்வலய இணைய நடுத்தவம் பேணல் கொள்கை இணையத்தை உபயோகிக்கும் யாவரும் சமத்துவமானவர்கள் எனவே அவர்கள் பரிமாறும் தகவல்களும் இணய தாபகக் காலத்தில் இருந்து இன்று வரை பேணப்படும் சமத்துவ வரையறையற்ற பரிமாற்று உரமைகளும் தரப்பட வேண்டும் என்பதே.

ஆயினும் ஒருகாலத்தில் இந்த சமத்துவத்தை அனுபவித்து வர்த்தகத்தில் வெற்றி பெற்ற அதே தாபனங்களாகிய தொலை தொடர்பு வியாபாரிகளும். கூகிள் Google , ஃபேஸ்புக் FaceBook, டவீட்டர் Twitter, அப்பிள் Apple போன்ற தொழிநுட்பத்தில் அதிவிருத்தியடைந்துள்ள விளம்பர வர்த்தகர்களும் இன்று இந்த சுந்திர மின்வலயத்தைத் தமது வர்த்தக நோக்குக்காக பங்கு போட்டு. சாதாரண நூகரவோரிற்கே பணயம் வைக்க முயல்கிறார்கள் என்பது ஒரு சாரார் குற்றச்சாட்டு.

நாம் இதை குறுகிய 30 வருட வரலாற்றில் எடுத்துப் பார்த்தாலும் நடுத்துவம் இதுவரை பேணப்பட்டிருக்காவிடின் இன்று நாம் அனுபவிக்கும் தொலைபேசி,மின் தட்டுப்பலகைகள் போன்ற உபகரணங்கள்,வீட்டில் இருந்து கடைக்கு போகாமல் பண்டங்கள், சேவைகள் வாங்கும் சௌகரியங்கள் ஏன் விதம் விதாமான இலத்திரனியல் பொழுதுபோக்குகள் சேவைகளுமே உருவாகியருக்க மாட்டாயின. மின் இணைய தாபகர்கள் தகவல் பரிமாற்று சுதந்திரத்தை, நடுத்துவத்தை இதுவரை பேணப்பட்டு இருக்கவில்லையானால் சரான் ஃபேட் Stanford பல்கலைக்கழக ஆய்வு கூடத்திலும் கூகிழ், ஹார்வேட் Harvard பல்கலைக்கழக மாணவர் விடுதியில் ஆரம்பிக்கப் பட்ட பேஸ் புக் FaceBook போன்ற தாபனங்கள் இதுவரை உருவாகியே இருக்கமுடியாது என்பது அடிப்படை உண்மை.

மின்வலைய இணைய சமத்துவம் ஏன் எமக்கு அவசியம்?

சட்டரீதியில் சமத்துவம் பேணப்படாவிட்டால் ஆதாயம் நாடும் பணமுள்ள வர்த்தக தாபனங்கள் புதிதாக வளரும் புதிய சேவைகளை முறியடிப்பதிலும், நுகர்வோர் சுதந்திரமாகத் தமக்குத் தேவையான மென்பொருள், மற்றும் சேவைகளை தெரிவு செய்து பெறும் ஆற்றலையும், சுயாதீனமாகக் தகவல் பரிமாறும் உரிமைகளையும் இழந்து விடலாம். இதற்கு முன்னோடியாக சம்பவங்கள் சில அண்மைக்காலத்தில் நடைபெற்றன.

2000-2010ம் ஆண்டுகளின் மத்திய பகுதியில் பிரபல தொலைதொடர்பு கேபிள் இணைப்பு வர்த்தக தாபனங்கள் சுயெச்சயாகவே தமது சகபாடி வர்த்தக தாபனங்களுடன் போட்டி போட்டதாக பிரபல இணைய ஓடுபட நெட்பிளிக்ஸ் NetFlix,மற்றும் தொலைபேசிச்சேவை ஸ்கைப்பை Skype தமது வாடிக்கையாளர் மத்தியில் எது வித அறிவிப்பும் இன்றித் துண்டித்தன. இது மின்வலய இணைய உபயோக எதிர்பார்ப்புக்கு முரணானதாகவும், சுயநலவாதமாகவும் காணப்பட்டது. இதைப் பற்றிய நுகரவோர்,மற்றும் சிறிய வர்த்தக தாபனங்கள் முறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய அமெரிக்க தகவல் தொடர்பு அமைச்சு FCC (Federal Communications Commission) 2010இல் திறந்த மின்வலை இணையம் என்றொரு ஆணையைக் கொண்டு வந்தது.

நாம் உபயோகிக்கும் மின்வலை இணையமானது ஒரு பொதுச்சொத்து. அதாவது இணையமானது உலகளவில் அரசுகளின், பொதுமக்களின் திறைசேரி மூலதனத்தை பல்கலைக்கழக, மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சிகளாகச் செலவிட்டு அமைக்கப்பட்டதொன்று. இன்றும் பெரும்பாலான பின்னணி இணைய செலவுகள் பாரிய அரசாங்கச் செலவழிப்பினாலேயே பேணப்பட்டும் வருகிறது. அரசுகள் அன்றாடத் தகவல் வலய இணைப்புக்களின் தொழிநுட்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய வர்த்தக தாபனங்களை உபயோகிக்கினும், மின்வலையானது தனியார் உடமையல்ல.

மின்வலை இணையத் தபாகம் பற்றிய சிலகுறிப்புக்கள்.

Sir_Tim_Berners-Lee

Sir Tim Berners Lee மின் இணையத்தின் தாபகர்

மேலும் தற்போதய மின் வலை இணையம் 1984ம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டபோது அதன் பெரும்பாலான தாபகர்கள் பல்கலைக்கழக, அமெரிக்க பாதுகாப்புத்துறையில் பணிபுரிந்தும் தனித்துவத்தைப் பேணும் புத்திஜிவி ஆய்வலர்கள். இந்த ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள்,
தொழிநுட்பவியலாளர்கள் மின் இணைய ஆரம்பத்திலேயே மின்வலை அடிப்படைத் தகவல் பரிமாற்றத்தை செய்யும் ஆற்றலைக் கொண்டும் அதே சமயம் கணனிகள் சுயாதீனமாக ஒன்றுடன் ஒன்று தடங்கல்கள் இல்லாமல் இணைந்து சேவை செய்வதையே மைய்யமாக வைத்து அமைத்தனர். இவர்கள் அன்று அமைத்த மின்வலை ஆய்வலர்கள் ஒருவருக்கொருவர் சௌகரியமாகத் தகவல் பரிமாற்றத்திற்காக உண்டு பண்ணப்பட்டது. ஏற்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழக மற்றும் அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மின்னஞ்சல் பரிமாறிக்கொள்ளவே மின்வலை பிரதானமாக உபயோகிக்கப்பட்டது. இதன் பின்னர் சுவிஸ் நாட்டின் சேர்ண் அணுவியல் ஆராய்ச்சிகூட சேர் ரிம் பேர்ணஸ் லீ Sir Tim Berners-Lee அவர்களின் உதவியால் HTML எனும் மென்பொருள் நிர்ணய அரிச்சுவடிய அமைப்பினால் world wide web மின்வலய இணையம் எனும் தட்டச்சு,படம்,ஒலி,ஒளி, ஓடுபடம் யாவும் பரிமாறக்கூடியதாக மாறியது.

இதோ மின்இணையத்தைப் பொதுச்சொத்து என்று பிரகடனப்படுத்த உலகளாவிய ரீதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முயற்சிகள்.

மின்வலய இணைய நடுத்துவம் பேணுவதற்கு முனையும் நாடுகள்
சட்டம் உருவாக்கியுள்ள நாடுகள்
கனடா
மெக்ஸிகோ
எக்குவடோர்
பெரு
சிலே
பிரேசில்
நெதர்லாந்து
ஸலொவீனியா
இஸ்ரேல்
இந்தியா

சட்ட உருவாக்கத்தில் முனைத்துள்ள நாடுகள்
அமெரிக்கா
கொலம்பியா
உருகுவே
ஆஜன்ரீனா
ஐஸ்லாந்து
ஐரேப்பிய ஒன்றியம்
பிரான்ஸ்
பெல்ஜியம்

சார்பான சிறிய சட்டமாற்றங்கள்
யப்பான்
தென் கொரியா
இங்கிலாந்து
நோர்வே

மின்வலய இணையம் பொதுச் சொத்து அதை தனியார் அபரிக்கலாகாது
பொது மக்கள், அமெரிக்க மற்றும் உலக அரசு பொதுமக்கள் வருமான வரி மூலதனத்தால் மனித மேம்பாட்டிற்காக ஆக்கப் பெற்ற சரித்திரத்தில் மாண்புள்ள படைப்பு மின்வலய இணையம். இதுவே இன்றய வர்த்தக, அரசியல் மற்றும் பொதுமக்களுக்கு அனுகூலம் தரும் மின்வலய இணையமாக மாறியதன் அத்திவாரம் எனலாம். இதை இன்று பங்குபோட்டு விற்க வருகின்றனர் ஒரு சாரார்.

மின்வலய இணைய நடுத்துவம் பேணல் பொது நலன் கருதி உருவாக்கப்பட்டு வரும் சாசனம். இது மக்களின் தற்போத மற்றும் திர்கால தகவல் பரிமாற்றுச் சுயாதீனத்தைப் பேணவதற்காக உருவாக்கப்பட்டு அமெரிக்க மண்ணில் மாத்திரம் அல்லாது உலகளாவிய பன்னாட்டு மக்கள் உரிமைச் சட்டம் எனலாம்.

தொகுப்பு: யோகி

உச்சாந்துணை:

  1. Wikipedia – https://en.wikipedia.org/wiki/Net_neutrality_law
  2. “Here’s how other countries are addressing net neutrality”, MarketWatch Nov 13, 2014
  3. Lawrence Lessig, Code:And Other Laws of Cyberspace, Version 2.0 (2006)
  4. Federal Communications Commission FCC 10-201

https://apps.fcc.gov/edocs_public/attachmatch/FCC-10-201A1_Rcd.pdf

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad