\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

நிழலும் அரசியல்வாதிகளும் !

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments

Nizhalum_arasiyalvaathikalum_620x422நிழல் ….
காலையில் முன்னே
சென்று வணங்குகிறது !
தேர்தலின்போது
நம்மையெல்லாம்
அரசியல்வாதிகள்
வணங்குவதைப் போல.

நிழல்…
பிற்பகலில் நம்
பின்னே தொடர்கிறது !
தேர்தல் நாளன்று
நம் ஓட்டுக்காக.
நம் பின்னே வரும்
அரசியல்வாதி போல.

நிழல் …
இரவில் அது
இருக்கும் இடம்
தெரியாமல் மறைகிறது !
வெற்றி பெற்ற பிறகு
தொகுதிப் பக்கமே
வராத அரசியல்வாதி போல !

பூ. சுப்ரமணியன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad