\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனிதனாக இரு !

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments

மனிதனாக இரு_520x624சுடர் விளக்காக இரு

அது முடியாவிடில்

பரவாயில்லை.

இரவில்

சுடர் விடும்

மின் மினிப் பூச்சிகளைக்

கொன்று குவிக்காதே !

பள்ளி செல்ல

மனமில்லையா ?

பாதகமில்லை

பள்ளி செல்லும்

குழந்தைகளின்

பாடப் புத்தகங்களை

மறைத்து வைக்காதே !

உண்மை பேச

மனமில்லையா ?

அது குற்றமில்லை

அரிச்சந்திரன் வரலாற்றைக்

குற்றம் கூறி

பொய்யின் உதட்டிற்குச்

சாயம் பூசி

அழகு பார்க்காதே !

கொடுமை கண்டு

குமுறவில்லையா ?

பரவாயில்லை !

கொடுமை கண்டு

தடுக்க ஓடும்

கால்களை வெட்டி

வீழ்த்தாதே !

மனித நேயமிக்க

மனிதர்கள் மீது

மலர்களைத்

தூவ முடியாவிடினும்

முட்களை எறிந்து

காயப்படுத்தாதே  !

எவ்வுயிரும்

தம் உயிர்போல் நினை!

முடியாவிடில்

வாழும் வரையாவது

மனிதனாக இரு !

 

– பூ. சுப்ரமணியன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad