வட அமெரிக்கக் கண்டமும் மெதுவாக இளவெனிலை நோக்கி நடையெடுக்கிறது. இந்தத் தருணத்தில் சக்கரைக் கிழங்குச் செடியை எவ்வாறு நமது யன்னலோரத்தில் வளர்க்கலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
- நீண்ட நீர் குடிக்கும் கண்ணாடிக் குவளை/Water glass அல்லது பூ வைக்கும் சாடி
- பெரிய நீளமான சக்கரைக் கிழங்கு ஒன்று
- பற்குத்தி (Toothpick), அல்லது சான்விச் குச்சிகள் மற்றும் மூங்கில் குச்சிகள் (Bamboo skewers)
- சாதாரண வீட்டுக் குழாய்த்தண்ணீர்
சக்கரைக் கிழங்கான மரக்கறி, மளிகை வாங்கும் கடைகளில் மிகவும் சொற்ப விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதொன்று. எனினும் சரியானக் கிழங்கைத் தெரிந்தெடுப்பதில் தான் நாம் முதலில் அக்கறை காட்ட வேண்டும்.
வளர்ப்பதற்காக நாம் தெரிவு செய்யும் கிழங்கைச் சுமார் 6-8 அங்குலம்/15-20 சென்டிமீட்டர் நீளமுள்ள பொலிவாக விளைந்துள்ளதாகப் பார்த்து எடுக்கவேண்டும். மேலும் கிழங்கானது அதுவித வெட்டுக்கள், உரசல் சேதங்கள் இல்லாததாகவும், அதன் முகிழ்கண்கள் அழுகாததாகவும் இருக்கவேண்டும்.
1. |
கிழங்கின் சரி பாதி இடத்தைத் தெரிவு செய்யவும். அடுத்து இந்த இடத்தில் சுற்றி 4-6-8 குச்சிகளை 1 அங்குலம் வரை உள்ளே செலுத்தவும். பற்குச்சிகளை விட பலமானவை சான்விச் குச்சி மற்றும் மூங்கில் skewers குச்சிகள். பலமான குச்சிகளைப் பாவித்தால் 4 குச்சிகள் போதுமானதாக இருக்கும்.
அடுத்து, பெரிய கண்ணாடிக்குவளைக்குள் கிழங்கின் கீழ்ப்புறம் இருக்குமாறு கிழங்கைக் குச்சிகளின் உதவியுடன் அந்தரத்தில் தொங்க விடவும். இங்கு முக்கியமான விடயம் கிழங்கு கண்ணாடிக்குவளையி்ன் சுற்றுப்பங்களைத் தொடாது பார்த்துக் கொள்ளவேண்டும்.
இதன் பின்னர் கிழங்கின் மூன்றில் இரண்டு பாகம் முகிழ்ந்து இருக்கமாறு தண்ணீர் நிரப்பிக்கொள்ளவும். கிழங்கைத் தாங்கும் குவளையை யன்னல் அருகில் வைக்கவும்.
|
|
2. |
கிழங்கு கொண்ட குவளையைத் தினமும் கண்காணிக்கவும். முக்கியமாக உள்ளிருக்கும் தண்ணீர் மட்டம் குறைந்திருந்தால் மறுபடி நீரை ஊற்றி மூன்றில் இரண்டு பாகம் ஆழ்ந்திருப்பதற்கு உதவவேண்டும்.
தண்ணீர் உறிஞ்சப்படும் நிலைகளில் இருந்து ஒவ்வொரு சில நாட்களிலும் சக்கரைக்கிழங்கு முகிழ்கள் துளிர்க்கின்றனவா என்று தெரிந்து நாம் கொள்ளலாம்.
முகிழ் வராது குவளையில் உள்ள நீர் கலங்கிய மற்றும் நாற்றம் அடிக்குமேயானால் அது கிழங்கு அழுகுதலிற்கான அறிகுறி. அவ்வாறாயின் நாம் அதை எறிந்து விட்டுப் புதிதாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.
|
|
3. |
ஏறத்தாழ 2 வாரங்களில் கிழங்கின் கீழ்ப்புறத்தில் வேர்கள் வளர ஆரம்பிக்கும். இதே சமயம் மேற்புறத்தில் காணப்படும் முகிழ்கண்களில் இருந்து குருத்துக்கள் தொன்றும். ஒவ்வொரு முகிழில் இருந்தும் குருத்து இலைகள் வெளியே வர ஆரம்பிப்பன. |
|
4. |
உங்கள் சக்கரைக்கிழங்கு பல கொடிகளையும் படர்த் தொடங்க நீங்களும் யன்னல் ஓரத்தில் சிறிய பந்தலைப் போட்டு அந்தக் கொடிகளைப் பரவவிடலாம். |
|
மேலும் இளவெனி்ல் கால சூரிய ஒளியும் வெப்பமும் உறைதலைத்தாண்டி 65-70 F/18-21 C வந்தால் வெளியை பெரிய பூச்சாடியிலோ இல்லை நிலத்தைக் கிண்டி பூத்தோட்டத்திலும் நட்டுக்கொள்ளலாம்.
குறிப்பு: சக்கரைக் கிழங்கு என்று இவ்விடம் குறிப்பிடப்படுவது ipomea batatas எனும் தாவர வர்க்கக் கிழங்கையே சாரும். இது இலங்கையில் வத்தாளங்கிழங்கு என்றும் பொதுவாக அழைக்கப்படும்.
யோகி அருமைநாயகம்
Wonderful tip .i am going to try it