யக்ஷகானம்
கடந்த ஏப்ரல் 2ம் தேதி யக்ஷகானம் (Yakshagana) என்ற நாட்டிய நாடகக் குழு மேபிள் க்ரோவில் உள்ள ஹிந்து கோவிலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. . குரு கீரமானி சிவானந்த் ஹெக்டே தலைமையில் பத்து நபர்கள் கொண்ட இக்குழு “சீதா புராணம்” என்ற நாட்டிய நாடகத்தை மேடையேற்றியது.
உடை, ஒப்பனை துவங்கி உரையாடல், நடனம், நாட்டிய நடிப்பு என்ற பல அம்சங்களும் பார்வையாளர்களின் கண்ணைக் கவர்ந்து, மனதைச் சுண்டியிழுத்தது என்றால் மிகையில்லை.
இந்தக் குழுவை கர்நாடகா மாநிலத்திலிருந்து கிளீவ்லாந்து ஆராதனைச் சங்கம், சாண்டியாகோவைச் சேர்ந்த இந்திய நுண்கலைச் சங்கம், மினசோட்டா இந்துச் சங்கம், லயாஸ்ரம் இந்திய நுண்கலை நிறுவனம் ஆகியவை இணைந்து அழைத்து வந்திருந்தன.
கோவில் நிர்வாகம் சார்பில் அக்ஷய், வல்லபா ஆகியோர் அனைவறையும் வரவேற்றனர். ஸ்ரீராம் நிகழ்ச்சியின் கதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கினார். அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில உங்கள் பார்வைக்கு !!!
ராஜேஷ் உங்கள் படப்பிடிப்பும், தொகுப்பும் பிரமாதம்