\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தூங்கா நகரம்

Filed in இலக்கியம், கவிதை by on April 25, 2016 0 Comments

thoonga-nakaram_620x433சிலருக்கு தூக்கம்
பலருக்கு துக்கம் !

தூக்கத்தை
சிலர் விற்றுக் கொண்டு இருக்கிறார்கள்
பணத்திற்காக ….
சிலர் வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்
வாழ்வதற்காக !

தூக்கத்தை
மறந்து பலருக்குப் புத்துணர்வூட்ட
டீ போடும் டீக்கடைக்காரர் !
மொட்டு மலருவதற்குள் விற்றுவிடத்
துடிக்கும் பூக்காரி !

பசியோடு வருவோரைப் பாங்குடன்
பசியமர்த்தும் இட்லிக்கடைகள் !
நடுநிசியிலும் நிலவை வம்புக்கு
இழுக்கும் காதல் கிறுக்கன் !

ஒலிப் பெருக்கிகளுக்கு இடையிலும்
தூங்கும் தெருவோர வாசிகள் !
பேருந்தில் பயணிப்போரைப் பத்திரமாகக்
கொண்டு சேர்க்கும் ஓட்டுநர்கள் !
தெருவிளக்கின் ஒளியில் வாழ்வில்
ஒளியேற்றத் துடிக்கும் பாமரன் !

பணக்காரரின் சொகுசுப் பங்களாவில்
குளிர்சாதனஅறையில் நாய்…
வீட்டினுள் தூங்க அதைக் காக்க
தெருக்கொரு காவல்காரன் !

தூக்கத்தை தொலைத்த இரவில்
எவ்வளவு நியாயங்கள் !!

உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad