\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மூன்றெழுத்து

Filed in இலக்கியம், கவிதை by on April 25, 2016 0 Comments

moonrezhuthu_620x620மூன்றெழுத்துச் சொல்
அந்தச் சொல் காட்டிய
நல்ல பாதையிலே
நம்மவர் வாழ்க்கையே
ஓடிக் கொண்டேயிருக்கிறது !

முழுநிலவின் ஒளியில்
புத்துயிர் புத்துணர்வு
பெறுவது போல.
ஆடும் மயில்கள்
பாடும் குயில்கள்
பரவசம் அடைவதுபோல் !

அந்தச் சொல்லில்தான்
அகிலமும் சுழல்கிறது
இயற்கையும் செயற்கையும்
கைகோர்த்துச் செல்கிறது !

இரவும் பகலும்
உரசிக் கொள்ளும்
அந்தி வேளையில்
அந்தச் சொல்லை
நாமும் உணரமுடியும்!

மதங்களும் சாதிகளும்
அந்தச் சொல்லைத்
தாங்கிக் கொண்டுதான்
ஒற்றுமையாக இருக்கின்றன !

அந்தச் சொல்
காட்டிய வழியில்தான்
போதிமரத்து புத்தனும்
சிலுவை சுமந்த ஏசுவும்
அண்ணல் காந்தியும்
வாழ்ந்து வந்தார்கள் !

கொலை கொள்ளை புரிந்து
காவியம் தந்த வால்மீகியானதும்
இரவின் மடியில்
தம்பதியர் சுகம் கண்டதும்
அந்தச் சொல்தான் !

அந்தச் சொல்
ஓரிடத்தில் அழிந்தாலும்
ஓராயிரம் இடத்தில்
முளைத்துக் கொண்டே
வலம் வரும் !

வன்முறைக்கு
விடைகொடுக்கும்
அந்தச் சொல்
அனைத்து உயிரிலும்
கலந்து உள்ளது !

அந்தச் சொல்தான்
அன்பு ! அன்பு !! அன்பு !!!

பூ.. சுப்ரமணியன்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad