ஆழ்நித்திரை
ஆழ்நித்திரை
பகைவனும் இருக்கமாட்டான் நண்பனும் இருக்கமாட்டான்
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
பசியும் இருக்கமாட்டாது படுத்துயரமும் இருக்கமாட்டாது
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
செய்வினை மறந்திடும் அதன்பயனும் மறைந்திடும்
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
ஆழ்துயர் அகன்றிடும் அகந்தையும் விலகிடும்
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
சொந்தமது நினைவில்லிலை நினைவதுவும் துளியுமில்லை
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
கடந்தகாலம் கலைந்தநிலை எதிர்க்காலம் கவலையில்லை
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
உடலோடு உரிமமில்லை உயிரதனின் தூயனிலை
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
சொர்கமும் நிச்சயமிதுவே எம்பெருமானும் எந்தன்வடிவே
நான் நித்தமும் நித்திரையில் இருக்கையிலே!
-பிரபு
Minneapolis Bharathi
Minneapolis kaviarasu Kannadasan!