பாலை தேசத்தில் கருநிற ஓவியம்!
பாலை தேசத்தில் பகலெல்லாம் காய்ந்து
நிசியில் தோன்றும் வெண்மதி வேளை
கண்டேன்!; கண்டேன்!
காதல் கன்மணியின் கருநிற விழியை
கண்டேன்! கண்டேன்!
மையிட்டு என்னை மையலில் வீழ்த்தும்
கண்மணியின் கருநிற விழியைக் கண்டேன்!
பாலை தேசத்தில் பரிதியின் நிழலிலும்
கண்மணியின் நினைவே எந்தன் சிந்தையில்
காணக் கிடைக்காத கவர்ச்சித் திராட்சையை
அவள் கண்களில் கண்டேன்!
கண்மணியின் கருநிற விழியைக் காணும்
ஒவ்வொரு கனமும் கவிதைகளால் ஓவியம்
தீட்டிடவே என் உள்ளம் துடிக்கும்
துடிப்பு இப்பொழுதும் இந்த
பாலை தேசத்து ஒற்றைப் பேரிட்சை
மரநிழலிலும் எனக்குத் தோன்றுகிறது!
கதிரவன் என் கண்னைச் சுட்டு
நான் இமைக்கும் அந்நொடியிலும்
அவளின் கருநிறத் திராட்சையும்
ரசமாக என்கண்ணின் கருவிழியில் கலந்து
இன்பத் தேன் ரசமாக விருந்தளிக்கிறது!
காதல் கண்மணியின் கருநிற விழியை
நொடிப்பொழுதில் கண்டால் அழகுக்கு
அணி செய்யும் ஆயிரம் ஆயிரம்
உவமையென்ன? ஓராயிரம் காவியம்
படைப்பர் கவிஞர்! என் கன்னியின்
கருநிற விழியில் என்னைப் பிரிந்து
ஆற்றொனாத் துயரத்தில் கரைந்து
மெல்லத் துளிர்க்கும் என் கன்னியின்
கண் மையைக் கொண்டு!
-இல.பிரகாசம்