குறுக்கெழுத்துப் புதிர்
கோடை விடுமுறையைக் கழிக்க ஏதாவதொரு ஊருக்குக் குடும்பத்துடன் சென்று வரலாமெனப் பலரும் முனைந்து கொண்டிருக்கும் வேளையில், உங்களுக்கு உதவ உலக நகரங்கள் சில குறுக்கெழுத்துப் புதிராக பட்டியலிடப்பட்டுள்ளன. புதிரை விடுவித்து, உங்களது பயணத்தை முடிவு செய்யுங்களேன்!!
குறிப்புகள்
மேலிருந்து கீழ்
1. ஸ்கொயர் மைல் நகரம் என்றழைக்கப்படும் ஐரோப்பிய நகரம். (4)
3. மூன்றாவது ரோம் எனப்படும் நகரம்.(3)
4. ஹாலிவுட், கோலிவுட் வரிசையில் சாண்டல்வுட் திரைத்துறை நகரம்.(5)
8. சிங்கநகரம் எனப்படும் ஆசிய நகரம்.(6)
9. 2016 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நகரம். (6)
10. பழங்காலங்களில் செங்கடகல எனப்பட்டுப் பின்னர் போர்ச்சுகீசியரால் பெயர் மாற்றப்பட்ட நகரம். (3)
11. எரிமலையின் மீது அமைந்திருக்கும் நியுசிலாந்து நகரம் (5)
12. இந்தியாவைக் கண்டுபிடித்தவரின் பெயரைக் கொண்ட இந்திய நகரம்.(6) – answer should be வாஸ்கோடகாமா, instead of வாஸ்கோடாகாமா. Please edit the image file.
15. பழங்காலத்தில் ஜஹாங்கீர் நகரமென அழைக்கப்பட்ட ஆசிய நகரம் (3)
16. தடைசெய்யப்பட்ட நகரம் என்றே அழைக்கப்பட்ட நகரம். (4)
18. பல போர்களுக்குப் பின்னும், மீண்டும் மீண்டும் எழுந்து நின்றதால் போலந்து நாட்டின் இந்நகரம் ஃபீனிக்ஸ் சிட்டி எனப்படுகிறது. மேரி க்யூரி பிறந்த நகரும் இதுதான்.(3)
இடமிருந்து வலம்
5. அரேபிய நாடுகளிலுள்ள மல்லிகைப்பூ நகரம். (5)
7. பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம் அமைந்துள்ள நகரம். (6)
8. எட்டாவது உலக அதிசயமாய் சிங்கமுகப்பாறை அமைந்துள்ள நகரம்.(4)
14. முன்னர் சர்ஃப் சிட்டி என்று அழைக்கப்பட்ட அமெரிக்க நகரம். (6)
17. சமாதான தலைநகர் எனப்படும் ஐரோப்பிய நகரம் (3)
20. அமெரிக்க வெர்ஜின் தீவான போர்ட்டோ ரிக்கோவின் தலை நகரம். (4)
வலமிருந்து இடம்
2. கிரானைட் நகரம் அல்லது சாம்பல் நகரம். (5) – should the answer be அபர்டீன் instead of அபர்தீன்?
6. பழங்காலத்தில் மிக நீளமான பெயர் கொண்டிருந்த ஆசிய நகரம். (4)
13. பத்தாயிரம் மடங்கள் கொண்ட ஜப்பானிய நகரம். (4)
19. உலக அதிசயங்களில் ஒன்றான கேளிக்கைக் கூடம் அமைந்துள்ள இத்தாலிய நகரம்(2)
கீழிருந்து மேல்
6. விளக்குகளின் நகரம் (city of lights) என வழங்கப்படும் ஐரோப்பிய நகரம். (3)
14. தேவாலயங்கள் நிரம்ப இருப்பதாலும் அனைத்து மதத்தினருக்கும் முக்கியத்துவம் அளிப்பதாலும் அமெரிக்காவின் பரிசுத்த நகரம் என்று குறிக்கப்படும் நகரம். (6)
(விடைகள்)
ரவிக்குமார்