\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சாலையோர அனாதையாய் நான்

Filed in இலக்கியம், கவிதை by on June 26, 2016 0 Comments

unemployed-graduateகண்டதும் காதல் கொண்டேன்!
கள் குடித்த மந்தி போல்!
இல்லான் உனை ஏற்க!
என் இல்லத்தார் எதிர்ப்புரைக்க!
உற்றோறும் பெற்றோறும் உறங்கும்
ஓர் இரவில் இல்லம் நீங்கி!
இல்லாள் ஆனேன் உன் இதயத்தில்!
இல்லாதவள் ஆனேன் உன் சுற்றத்தில்!
காதல் கொண்டவன் துணையிருக்க
கண்டவர் கருத்தெதற்கு என்றிருக்க
நான் இல்லா வேளையிலே எனைத்தூற்றி
இல்லாதாக்கினறே உன் இதயத்தில்
அம்மணக் காமமும் அலுப்பெடுக்க
அன்பெனும் காதலும் அற்றுப்போக
வாய்த்துடுக்கெனும் வம்பும் வந்து போக
சாலையோர அனாதையாய் நான்…

-சத்யா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad