ரமலான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நாம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!
இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை
1.ஈமான் கொள்வது (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள்)
- ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது.
- ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது.
- ஸகாத் வழங்குவது.
- இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது.
பன்னிரெண்டு முஸ்லிம் மாதங்களில் ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள் உள்ளது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்முஸ்லிகளுக்குக் கடமையாக்கியுள்ளான். “ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீதும் நோன்பு விதிக்கப்பட்டது போல்உங்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது; அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம் என்று இறைவன் தன் அருள்மறையாம்திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
மேலும் “உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” என்று குர்ஆனில் கட்டளையிடுகின்றான்.
“பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம் பிறையை மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பதுநாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி அவர்கள் கூறினார்கள். ஏனைய மாதங்களை விட ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள்உள்ளன. இம்மாதத்தில் செய்யும் நன்மைகளுக்குப் பத்து முதல் எழுபத்தாறு மடங்கு நன்மை கிடைக்கும். நரகத்தின் வாசல்கள்அடைக்கப்பட்டுச் சுவனத்தின் வாசல்கள் திறக்கப்படும்.. ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படும். குர்ஆன்முதன் முதலின் அருளப்பட்ட இரவான லைலத்துல் கத்ர் இம்மாதத்தில்தான் இருக்கின்றது. இந்த மாதத்தில் முஸ்லிம்கள் பகல் முழுதும்பசித்திருந்து இரவில் வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுவர்.
அதிகாலையில் எழுந்து உணவு உட்கொண்டு அதன் பின் நோன்பினுடைய எண்ணம்(நிய்யத்து) செய்து கொள்ளவேண்டும்.அதன் பிறகு பகல்முழுதும் உண்ணவோ பருகவோ கூடாது. பிறகு சூரியன் மறையும் நேரத்தில் பேரித்தம் பழம் , தண்ணீர் கொண்டு நோன்பு திறக்க வேண்டும்.
மற்ற வணக்கங்களை விட நோன்பிற்கு ஒரு மகத்துவம் உண்டு.மற்ற வணக்கங்கள் வெளிப்படையாகத் தெரியும்.நோன்பு என்பதுநோன்பாளியும் இறைவனும் மட்டுமே அறிந்த ஒன்றாகும். ஏனெனில் நான் நோன்பிருக்கின்றேன் என்று ஒருவர் கூறாத வறை மற்றவர் அதனைஅறிந்து கொள்ளமுடியாது. மற்ற நேரங்களில் அனுமதிக்கப்பட்ட உணவு தண்ணீர், மனைவியுடன் இருத்தல் விஷயங்களையும்நோன்புனுடைய காலத்தில் தவிர்த்திருப்பதாலும் நோன்பிற்கு இறைவன் நானே கூலியாகின்றேன் என்று கூறுகின்றான்.
ஊரில் இருக்கக்கூடிய புத்திசுவாதீனமுள்ள , பருவமடைந்த, நோன்பு நோற்க சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண்அனைவருக்கும் நோன்பு கடமையாகும். நோன்பை விடுவதற்குச் சிலபேருக்குச் சலுகை அளிக்கப்பட்டிருக்கின்றது. தற்காலிக நோயாளிகள்,பயணிகள்,கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், நோன்பு நோற்பதால் தங்களுக்கோ அல்லது தங்கள் குழந்தைக்கோபாதிப்பு ஏற்படும் என்று பயந்தால் அவர்கள் நோன்பு நோற்காமல் இருக்கலாம்.
இவர்கள் விட்ட நோன்பினை மற்ற காலங்களில் கடைப்பிடிக்கவேண்டும். நிரந்தர நோயாளியாகின் நோன்பிற்குப் பரிகாரமாகத் தினமும் ஒருஏழைக்கு உண்ண உணவு அளிக்கவேண்டும். நோன்பு நோற்க இயலாத முதியவர்கள் நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. மாதவிடாய்வந்த பெண்கள் நோன்பு வைப்பது தடை செய்யப்பட்டது. மாதவிடாய் போது விடுப்பட்ட நோன்புகளை ரமலானுக்குப் பிறகு நோற்க வேண்டும்.
ரமலான் மாதத்தில் அதிகமாகத் தான தருமங்கள் செய்ய வேண்டும். தாங்களுடைய வருமானத்தில் 2.5 சதவீதத்தைத் தானமாகக் கொடுக்கவேண்டும். உதாரணமாக ஒருவர் தன் தேவை போக ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தால் அவர் அதிலிருந்து 2500 ரூபாயை ஏழைகளுக்குக்கொடுக்க வேண்டும்.
தன்னிடமிருந்து பணம் , நகை மற்றும் வருமானங்கள் அனைத்தையும் கணக்கிட்டு அதற்குறிய பணத்தைத் தருமமாகத் தருவதுஒவ்வொருவருடைய கடமையாகின்றது.
ஜகாத்துல் ஃபித்ர் அனைத்து முஸ்லிம்கள் மீதும் கடமையானது. இது தாங்கள் உண்ணக்கூடிய உணவுத் தானியத்தை வீட்டில் உள்ள அனைத்துஉறுப்பினர்களையும் கணக்கிட்டு (ஒவ்வொருவருக்கும் 2.5 கிலோ வீதம் ஏழைகளுக்குக் கொடுக்கவேண்டும். இது ரமலானின் சிறப்புத்தொழுகை (ஈதல் ஃபித்ர்) தொழுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டும்.
இறைவன் ரமலான் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக! ஆமீன்!
-அஹமது