அபாயகாலத் தயார்நிலைப் பொட்டலம்
நாம் வாழும் சூழல்களில் கோடைக்கால அடைமழைகளும், பனிக்காலப் புயல்களும் பொதுவாக ஏற்படும் விடயங்கள். இப்பேர்ப்பட்ட கால நிலைகளில் நாம் நிதானமாக ஆலோசித்து முன்கூட்டியே செயல்படுவதன் மூலம், நாம் எமக்கும் எமது குடும்பத்திற்குமான கடைசி நேர அசௌகரியங்களைத் தவிர்த்திட வழிபண்ணிக்கொள்ளலாம். இதற்கு நாம் இலகுவாக கையில் எடுத்துச் செல்லக்கூடிய தயார்நிலைப் பொட்டலங்களை அமைத்துக் கொள்வது சாலவும் நன்று.
- எந்த அபாயக்கால பொழுதையும் எதிர்கொள்ள நாம் எமது குடும்பத்திற்கு 72 மணித்தியாலங்கள் அல்லது 3 நாட்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைத் தயார் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.
- சுவிஸ் இராணுவக் கூட்டுக் கத்தி போன்ற பன்முக தேவைகளையும் பூர்த்திச் செய்யக்கூடிய உபகரணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும்
- முதலுதவி / ஆபத்துக்கால மருத்துவப் பெட்டி
- மலசலவறை நிவர்த்தி, சுத்தமாக்கும் பரிகாரப் பொருட்கள்
- குடும்ப அங்கத்தவருக்குத் தேவையான நோய்வாய் மருந்துகள் ஏழு நாட்களுக்கு
- குடும்பத் தொடர்பு தகவல் அட்டவணை
- இருக்கும் இடத்தின் பூகோள வரைபட அச்சுப் பிரதி
- இலகுவில் பாழாகாத மூன்று நாட்களுக்கான உணவு குடும்பத்தினருக்கும், உடன் வாழும் செல்லப்பிராணிகளுக்கும்
- அன்றாடக் குடிநீர் ஒவ்வொரு குடும்ப அங்கத்தவருக்கும் ஒவ்வோரு நாளிற்கு ஒவ்வொரு கலன் என்ற கணக்கில்
- எரிகலமுடைய அல்லது கையால் சுழற்றி டைனமோவினால் எரியும் கைவிளக்கு மற்றும் பிரத்தியேக எரிகலன்கள்
- காலநிலை மற்றைய அறிவிப்புகளிற்காக வானொலி.
- கைத் தொலைபேசி மேலும் அதை செயற்படுத்தும் மின்தொடுப்புக்கள். காலநிலை மாற்ற அறிவிப்புக்கள் கோரப்பட்டால் உடன் கைத் தொலைபேசிகளை முழுதாக மின்சாரத்தை ஏற்றி வைத்துக் கொள்ளவேண்டும்.