\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

நயாகரா அருவி

2016 TRIP 1087 620 x 415அமெரிக்கன் அருவி – இடப்பக்கம், பிரைடல் வேல் அருவி – இடைப்பட்ட பக்கம், கனடியன் அருவி – வலப்பக்கம் மூன்று அருவிகளும்  சேர்ந்து தான் நயாகரா அருவியென அழைக்கப்படுகிறது. 18000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஓன்டாரியோ 2 -3 கிலோமீட்டர் பருமனான ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டிருந்தது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டத் துவாரம் மூலம் உருகியது தான் கிரேட் ஏரி (Great Lakes)

அருவியின் உயரம், தண்ணீர் அளவு

அமெரிக்கன் அருவி & பிரைடல் வேல் அருவி

செங்குத்தான இடத்தின் ஓரம் 1060 அடி / 328.08 மீட்டர்

உயரம் 176 அடி / 53.6 மீட்டர்

தண்ணீர் அளவு – 150,00 US Gallons / 568,811 லிட்டர் / விநாடி

கனடியன் அருவி

செங்குத்தான இடத்தின் ஓரம் 2600 அடி / 792.4 மீட்டர்

உயரம் 167 அடி / 50.9 மீட்டர்

தண்ணீர் அளவு – 600,00 US Gallons / 2,271,247 லிட்டர் / விநாடி

நயாகரா பெனின்சுலா 12500 ஆண்டுகளுக்கு முன்னர் பனிக்கட்டி இல்லாத இடமாக மாறியது. முதலில் கரைந்து வடது பக்கமாக சென்று உருகிய Uனிக்கட்டி லேக் எரியாக மாறியது.

இந்த  லேக் எரி, நயாகரா ஆறு, லேக் ஒன்டாரியோ, செயின்ட் லவ்ரன்ஸ்  வழியாகச் சென்று கடலில் கலக்கிறது.

10,500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனிமவள மாற்றக்கள் பல ஏற்பட்டன. இதனால் பனிக்கட்டி மற்றும் தண்ணீர் செல்வதிலும் மாற்றங்கள் உண்டாயின இதனால் நயாகரா அருவிக்கு 10% நீர்வரத்து தடைபட்டது. எனினும் 5500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மாற்றத்தால் முன்பு கிடைத்த அதே அளவு நீர் இந்த அருவிக்கு கிடைக்கிறது.

இந்த சுற்றுலா தளத்திற்கு வருடத்திற்கு 12 மிலியன் மக்கள் வந்து செல்கிறார்கள். பனிக்காலத்தில் இந்த அருவி பனிக்கட்டியால் உறைந்து விடும். முன்பு இதன் மேல் நடத்து சென்று அருவியைப் பார்க்கலாம் பின்பு ஏற்பட்ட  விபத்துக்களால் அதைத் தடை செய்து விட்டனர்.  தற்போது இந்த நீர்வீழ்ச்சியை அமெரிக்க பக்கத்திலிருந்தும், கனடியன் பக்கத்திலிருந்தும் பார்க்கலாம். கனடியன் பக்கத்திலிருந்து பார்ப்பது மிகச் சிறப்பானதாகும்.

Niagara

இந்த நீர்வீழ்ச்சியைப் படகு மூலமாக மிக அருகில் சென்றும், நீர்வீழ்ச்சியின் பின்புறமாக நடந்துச் சென்றும் பார்க்கலாம். நயாகராவைத் தவிர்த்து மேலும் பல சுற்றுலா இடங்கள் டொராண்டோவில் உள்ளன.

ராஜேஷ் கோவிந்தராஜ்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Anonymous says:

    மிகவும் மனோரம்யமான காட்சிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad