காதல் கொண்டேனடி !
நீ காஷ்மீர் சென்றால்
இமயமலையே திரும்பிப் பார்க்கும்
நீ கன்னியாகுமரி சென்றால்
கடலும் எழுந்து பார்க்கும்
யார் இந்த ( கன்னிய)குமாரி என்று
நீ எல்லையில் நடந்தால்
தீவிரவாதமோ தவிடு பொடியாகும்
சேலையின் தகதகப்பில் கடுங்குளிரும்
தென்றலாய் வருடிடும்
மூவண்ணக் கொடியை
கறுப்பு வெள்ளை என
இரு வண்ணமாக்கி இரு கண்ணில்
ஒலியும் ஒளியும் காட்டியவளே
தேசப்பற்று கொண்ட நான் உன்மேல்
நேசப்பித்து கொள்ள
வள்ளுவனின் ஒன்றரை அடி
நடையை விட
கன்னியவளின் அன்னநடை
ஆயிரம் பொருளை விளக்குதடி
காற்று உன் மேல் கோபம் கொண்டதோ
உனைத் தீண்ட முடியாக் கோபத்தால்
தானே புயல் உருவானதோ
உன் தீண்டலில் நான் பிறந்ததன்
பொருள் உணர்ந்தேனே !
கனவு காண்கிறேன்
உனைக் கண்ட நாள் முதலாய்
உன் கண்ணோடு என் கண்கள்
கண்டு கொண்ட நாள் முதலாய்
கனாக் கண்டேனடி
காதல் கொண்டேனடி !
பித்தனாகி போனேன் !!
அவள் பேசிய வார்த்தைகள்
காவியமானது
அவளின் மெளனம் ஒரு
ஹைக்கூ
அவள் என் மீது வீசிய
பார்வைகள் பிகாசோ
ஒவியமானது
அவள் நடந்து சென்ற பாதை
தாமிரபரணி ஆறானது
அவள் சூடியதாலேயே
மலருக்கு இவ்வளவு மணமோ
சூடிக் கொடுத்த சுடர்கொடியே
அவள் பாடிய கானம்
குளத்தங்கரைக் குயில்களின்
ரீங்காரமனதோ?
அவள் முகம் பார்த்த கண்ணாடி
தன்மேல் கர்வம் கொண்டதோ?
பேரழகியின் பிம்பத்தைத் தன்னுள்
கொண்டதாலோ
அவளால் காதல் வயப்பட்ட நானோ
அவள் நினைவலையில்
காதல் பித்தனாகிப் போனேனே
காதல் பக்தனாகிப் போனேனே
நான் புத்தனாக மாறுவதும்
பித்தனாக மாறுவதும்
உன் கையில் உள்ளதடி
என் சகியே
பிரியசகியே !!
உமையாள்
Tags: love