குறுக்கெழுத்து
கடந்த சில மாதங்களாக உலகத் தமிழர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன், உச்சரித்த ஒரு பெயர் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் நடித்தசில படங்களை இந்தக் குறுக்கெழுத்துப் புதிரில் கண்டுபிடிப்போமா?
இடமிருந்து வலம்
- “இது ரஜினி ஸ்டைல்” என்று ரஜினி கமலிடம் அடிக்கடிச் சொல்லும் படம்.(8 எழுத்துகள்)
- ரஜினியோடு ராதா கடைசியாக இணைந்து நடித்த ஆர். சுந்தர்ராஜனின் படம். (5)
- ரஜினியை வைத்து ஏ.வி.எம். நிறுவனத்தினர் தயாரித்த முதல் திரைப்படம். இப்படத்தின் வில்லனாக
நடிக்க மறுத்தவர் விஜயகாந்த் (7)
- குழந்தை நட்சத்திரமாக ரஜினியோடு நடித்த மீனா அவருக்கு ஜோடியாக நடித்த முதல் படம்.(4)
- இந்தப் படத்தில் “ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” என்று ரஜினி பேசிய வசனம் மிகப்
பிரபலமடைந்தது. (5)
- கராத்தே பயிற்சி பெற்றவராக ரஜினிகாந்த் நடித்த எஸ்.பி. முத்துராமன் படம்.(5)
- சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம். (7)
- ரஜினிகாந்த் நடிக்க, இளையராஜா, மணிரத்னம் சேர்ந்து பணியாற்றிய கடைசிப் படம். (4)
- மீசையின்றி ரஜினி நடித்த ‘கோல்மால்’ படம்.(6)
- இசைக் கலைஞராக, இரண்டு பெண்டாட்டிக்காரராக ரஜினி நடித்த ‘அல்லாரி மொகுடு’ படத்தின் தமிழ் வடிவம்.(2)
- வில்லனாகவும், நாயகனாகவும் ரஜினி நடித்த படம். (5)
- ரஜினிகாந்த் கதை எழுதித் தயாரித்து சிறிய வேடத்தில் நடித்த படம். (3)
- ‘கூன் பசினா’ படத்தின் தழுவலாக, கே. பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினி
நடித்த படம். (2)
- இயக்குனர் ஆர். சி. சக்தியின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரே படம். (7)
மேலிருந்து கீழ்
- நடிகர் சிவகுமார் நடிக்க மறுத்து ரஜினிகாந்த் மிகவும் தயக்கத்துடன் நடித்த எஸ். பி. முத்துராமன் படம்.(12)
- ‘நா நின்னா மறியலாரே’ எனும் கன்னடப் படத்தின் தழுவலாக, ரஜினிகாந்த் மோட்டார் சைக்கிள் வீரராக நடித்த படம்.(6)
- எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைத்த மிகக் குறைவான தமிழ்ப் படங்களில் ஒன்று இது. (10)
- இயக்குனர் விசு இயக்க மறுத்து, பின்னர் வசந்த் இயக்கத் துவங்கி வெளியேற, வேறு வழியின்றி சுரேஷ் கிருஷ்ணாவை வைத்து பாலச்சந்தர் தயாரித்த ரஜினிகாந்த் படம். (5)
- ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி நடித்துத் தயாரித்த படம்.(2)
- அணையைக் காப்பாற்றும் பாத்திரத்தில் ரஜினி காந்த், அனுஷ்காவுடன் சேர்ந்து நடித்த படம்.(3)
- ஏழை அப்பாவி மாணிக்கமாக ஜொலித்த மிகப் பெரியவெற்றிப் படம். (3)
- இடையில் நடிப்பதை விட்டு விடலாம் என்று முடிவெடுத்திருந்த ரஜினியை அழைத்து வந்து ‘டான்’ வேடத்தில் நடிக்க வைத்த கே. பாலாஜிக்குப் பெரிய வெற்றியளித்தப் படம். (3)
- சிரஞ்சீவியும், ரஜினிகாந்தும் சேர்ந்து நடித்த ஒரே தமிழ்ப் படம். (2)
வலமிருந்து இடம்
- ‘கதா பறையும் போள்’ மலையாளப் படத்தை ரஜினி சிறு பாத்திரத்தில் நடித்த பி. வாசு படம்.(4)
- மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய, ரஜினி மலேசியப் பிரஜையாக நடித்த படம்.(3)
- ரஜினிகாந்த் மனைவியை வைத்து ஆபாசப் படமெடுக்கும் வில்லனாக வந்த படம்.(4)
- சம்பளக் குறைப்புப் பற்றி விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையில், ரஜினி சம்பளக் குறைப்புக்கு மறுத்ததால் படத்தை வாங்கயாரும் முன் வராத போது, நேரடியாக அரங்குகளில் (வினியோகஸ்தர்கள் இல்லாமல்) வெளியிடப்பட்ட படம்.(5)
கீழிருந்து மேல்
- இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஸ்ரீதேவியுடன் இரட்டை வேடங்களில் நடித்த படம்.(2)
- நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ரஜினி நடிக்க, பி. வாசு இயக்கியப் படம்.(6)
- ரஜினி நடித்த ஃபோட்டோ ரியலிஸ்டிக் மோஷன் காப்ச்சர் படம்.(6)
- ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் ரஜினி படம்.(3)
– ரவிக்குமார்