சிறுகதைப் போட்டி
கதைகளைச் சமர்பிக்க வேண்டிய இடம்
அமெரிக்கச் சூழலில் தமிழ் இலக்கியத்தைத் தழைக்கச் செய்யப் பனிப்பூக்கள் முயன்று வருவது நீங்கள் அறிந்ததே. அம்முயற்சியின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் நடைபெறும் சிறுகதைப் போட்டி இந்த ஆண்டும் தொடர்கிறது.
அண்மையில் இயற்கையெய்திய கவிஞர் நா. முத்துக்குமார் எண்ணற்ற திரைப் பாடல்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல பாடல்கள் நம் நெஞ்சை மயிலிறகால் வருடுவது போன்று இதமளித்தவை; சிந்திக்கச் செய்தவை ;
ஆழ்ந்த பாதிப்புகளை உண்டாக்கியவை. அப்படி நம் அனைவருக்கும் பிடித்த கவிஞர் நா. முத்துக்குமாரின் வரிகளைக் கருவாகக் கொண்டு சிறுகதைகள் புனைவது, அவரது கவித்திறனுக்கு நாம் செய்யும் பெருமையாக அமையும் என்ற எண்ணத்தில் இந்தச் சிறுகதைப் போட்டி அமைகிறது.
போட்டிக்கான விதிமுறைகள் :
- கதையின் கரு கவிஞர் நா. முத்துக்குமாரின் ஏதேனுமொரு பாடல் வரிகளின் தாக்கத்தில் அமைந்திருக்க வேண்டும். பாடல் வரிகள் கதையின் தலைப்பாக மட்டுமல்லாது கதையின் கருவாக இருத்தல் அவசியம்.
- சிறுகதைகள் சொந்தமாகப் படைக்கப்பட்டிருக்க வேண்டும். வழக்கமாகப் பனிப்பூக்களின் படைப்புக்களுக்கு நீங்கள் அனுப்புவது போன்றே, இந்தப் படைப்பும் வேறெங்கும் வெளியிடப்படாதது என்ற உறுதிமொழி இணைக்கப்பட்டிருக்க வேண்டும்..
- கதையாசிரியரைப் பற்றிய சிறு குறிப்பும் இணைக்கப்பட வேண்டும்.
- கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்டு, ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் அவசியம். யூனிகோட் ஃபாண்ட் பயன்படுத்தி, மைக்ரோசாஃப்ட் வேட் கோப்பாக இருத்தல் அவசியம்.
- குடும்பம், காதல், நகைச்சுவை, திகில் என எந்தப் பிரிவையும் கதை சார்ந்திருக்கலாம்.
- சமர்பிக்கப்படும் கதைகளை, தங்களது இணையப் பக்கங்களிலோ, புத்தகங்களிலோ வெளியிட, பனிப்பூக்கள் முழு உரிமையும் பெறும்.
- இப்போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் படைப்புகளை, பனிப்பூக்களின் அனுமதியின்றி வேறெந்த வாயிலாகவும் மீள் பிரசுரம் செய்யக்கூடாது.
- கதைகளைச் சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் : செப்டம்பர் 3, 2016.
If I submit a story will you give me permission to publish in a book later if I want. Or do you climb one hundred percent rights to the story. Because normally authors have the copy right. It will be reasonable if you say the authors will have full right after several moths of publication here, once accepted. If they want to publish before that then they must obtain permission. That is the generally accepted and practiced rule by magazine. Please kindly answer me. Thank youUthaya Kumar
Vanakkam Uthaya kumar
Appreciate your inquiry. Our foremost objective is to provide a sustainable publishing platform for the Tamil writers and the creative in North America. To provide an exclusive platform that reaches the target audiences, we have to make thoughtful considerations that will benefit all parties. Kindly reference Panippookkal Magazine Terms and Conditions http://www.panippookkal.com/ithazh/terms-conditions- [Paragraph – 3]. Panippookkal Magazine published by Loon Media Group (LMG), P.O. Box 3021, Burnsville, MN 55337, USA. We are a US commercial entity. LMG follows US copyright best practices.
Thank you
Publisher, Panippookkal Tamil Cultural Magazine
ISSN 2326-7763 (Online)
P.O. Box 3021, Burnsville, MN 55337, USA
Follow us at panippookkal.com