\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கவிதைக் கண்கள் !

Filed in இலக்கியம், கவிதை by on August 28, 2016 0 Comments

aditi_eye

உன் பார்வைகள்
என் மீது
பட்டுத் திரும்பியபோது
என் உடம்பில்
புது இரத்தமே பாய்ந்தது !

என் இதயம்
எல்லாம்
கவிதைகள் நிரம்பின !

என் வீட்டு மரத்தில்
கூவும் குயிலின்
இனிமையைக்
கேட்கும் போது
எனக்குள் இருந்த
கவிதை உற்சாகம் !

உன் இனிய குரலைக்
கேட்க வைத்து
என்னை
ஏங்க வைத்தாய் !

வெகு அந்தரங்கமான
அன்பை
உன் இதயத்தில்
சொல்லத்தான் நினைத்து
சொல்லாமலே
பூட்டி வைத்தேன் !

அன்பானவளே !
நீ என்னை
வெறுத்த அந்த நாட்களை
சோகக் கவிதைகளில்
கரைத்தேன் என்பது
உனக்குத் தெரியாது !

இன்றும்
வானவில்லை
மாலையாக வளைத்து
என் கைகளில்
வைத்திருக்கிறேன் !
உன்னை மணம் புரிய
ஏன் என்றால்
உன் சிரிக்கும்
கண்களோ
எனக்குக்
கவிதைக் கண்கள் !

பூ. சுப்ரமணியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad