ஆடிக் கிருத்திகை 2016
ஆடி மாதக் கிருத்திகை நாளன்று தமிழ்க் கடவுள் முருகனுக்கு விழா எடுப்பது தொன்று தொட்டு நடந்து வரும் வழக்கம்.
உலகெங்கிலுமுள்ள முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகை திருவிழாவன்று பால் குடம், காவடி எடுத்து சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு மினசோட்டாவில் இருக்கக் கூடிய ‘மேப்பிள் குரோவ்’ ஹிந்துக் கோவிலில் ஜூலை மாதம் 30ம் தேதி ஆடிக் கிருத்திகை திருவிழா கொண்டாடப்பட்டது.
அன்றைய தினத்தில் முருகப் பெருமானுக்கு, சிறப்பு ஆடை அலங்காரம், சிறப்பு வழிபாடு என பல சிறப்பு நிகழ்ச்சிகளை கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய, தொண்டர்கள் பலரும் குழுமி விழாவைச் செழுமைப்படுத்தினர். முருகக் கடவுளைப் போற்றி பல பாடல்கள் பாடப்பட்டன.
பின்னர் பக்தர்கள் முருகப் பெருமானைச் தேரில் ஏற்றிக் கோவிலை வலம் வந்தனர்.
தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வாழையிலை விருந்துடன் ஆடிக்கிருத்திகை திருவிழா இனிதே நிறைவுற்றது.
இத் திருவிழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக ..
ஆடிக் கிருத்திகை
– ராஜேஷ் கோவிந்தராஜன்
அழகான தொகுப்பு