\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குறுக்கெழுத்துப் புதிர்

தமிழ்த் திரைப்பட உலகம் தமிழர்களால் மதிக்கப்படுகிறதோ இல்லையோ, பிரான்ஸ் நாட்டினரால் பெரிதும் கவனிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 21ம் நாள் உலக நாயகன் கமலஹாசன் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலிய’ விருதுக்குத் தெரிவு பெற்றுள்ளார். சினிமாவைத் தனது தொழிலாக மட்டுமல்லாமல் தனது காதலாக நினைத்து உணர்வுப் பூர்வப் பணியாகச் வரும் கமலஹாசனுக்கு இவ்விருது சாலப் பொருந்தும். இவ்விருதினை அளித்த பிரான்ஸ் அரசுக்கு நன்றியையும், இவ்விருதினைப் பெற்ற திரு. கமலஹாசன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பனிப்பூக்கள் சார்பில் சமர்ப்பித்து மகிழ்கிறோம்.

இத்தருணத்தில் கமலஹாசன் அவர்களது பல சிறந்த படைப்புகளை நினைவுகூரும் வகையில் அவர் நடித்த படங்களின் பெயர்களைக் கொண்டு இந்த குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிரை விடுவிக்க முயல்வோமா?

CROSSWORD_PUZZLES_13

இடமிருந்து வலம்

1. உதயமூர்த்தியின் கட்டுரைத் தலைப்பில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்தப் படம். (11)

2. கமலஹாசன் பெண் வேடமிட்டு நடித்த படம். (7)

3. கமலஹாசன் இயக்கி நடித்த முதல் படம். (3)

4. வசனங்கள் ஏதுமில்லாத கமலின் படம். (6)

5. காட்ஃபாதரை நினைவூட்டிய மணிரத்னம் படம். (4)

6. கமலை தேசப்பற்று முதியவராக சங்கர் காட்டியிருந்தார். (5)

7. iஇப்படத்தில் இலங்கைத் தமிழைப் பயமின்றி பேசி நடித்திருந்தார் கமல். (3)

8. தான் நேசிக்கும் சினிமாவுக்காக இதில் கமல் பத்தும் செய்திருந்தார். (6)

9. பி.சி. ஸ்ரீராமுடன் கமல் இணைந்து மிரட்டிய படம். (7)

10. கல்லூரியில் விரிவுரையாளராக உயிரைக் கொடுத்து நடித்திருந்தார் கமல். (5)

11. அடுக்குத்தொடராக வரும் படத்தின் தலைப்பில் முதல் பாதி மட்டும் இங்குள்ளது. (6)

12. இதில் தெலுங்கில் கமல் மற்றொரு சரித்திரம் படைத்திருந்தார். (6)

மேலிருந்து கீழ்

1.கமல்வாய் பேச முடியாதவராக நடித்த படம். (9)

2.கமல் இதில் கம்யூனிசம் பேசிய ஓவியராக வந்தார். (6)

13.முடிவுறாத கனவுப் படம். (7)

14. புரட்சித் தலைவருடன் கமல் இணைந்து நடித்த படம். (6).

15. ராங் நம்பராக இருந்தாலும் ஹலோ மை டியர் சொல்லி பெண்களை மயக்கினார் இதில். (6)

16.சண்டித்தனம் பண்ணாமல் படத்தின் பெயரை மாற்றிக்கொண்டார். (5)

9. இதில் மனநலம் குன்றியவராக தன் காதலியைக் கடத்திச் சென்றார். (2)

17. பாலு மகேந்திராவின் நட்பால் நடித்த கன்னடப்படம். (3)

இடமிருந்து வலம்

18. நடிப்புத் தேவரின் பிள்ளையாக வந்த படம். (6)

19. கோயம்புத்தூர் மருத்துவராகி கொங்குத் தமிழ் பேசியிருப்பார் இப்படத்தில். (6)

கீழிருந்து மேல்

20. முதல் முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கிய படம். (6)

21. பானுப்பிரியாவோடு இணைந்து சென்னைத் தமிழில் கசாப்புக் கடைக்காரராக நடித்த படம். (5)

9. ஸ்ரீதேவியோடு நடித்திருந்தார். .வி. சசி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பெயரில் அபிஷேக் பச்சன் நடித்த இந்திப் படம் வெளிவந்தது. (2)

19. பரதநாட்டியக் கலைஞராக நடித்த விஸ்வநாத்தின் படம். (6)

குறுக்கெழுத்து – விடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad