\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முகமறியாக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on September 20, 2016 0 Comments

uchchithanai_620x443முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!

மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!

அறியாப் பருவத்தில் நம்முள்ளே
அரும்பிய சிறு புன்னகைக் காதல்
அன்பின் விலாசத்தைத் தன் முகவரியாகக்
கொண்டவளே ….

அன்னைக்கு அன்னையாய் அன்பை
அருட்கொடையாய் அளிப்பவளே ….
அன்பின் பழரசத்தை இன்முகத்தோடு
அழகாய்த் தருபவளே …!!

முதல் காதல் முடிவல்ல …
மூச்சு உள்ள வரை மனதோடு தொடர்ந்து
மண்ணோடு மக்கிப்போவதல்ல
மனதோடு முட்டி மோதி முளைத்திடும்
மகத்துவமே காதல் ….!!

உமையாள்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad