\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

Filed in இலக்கியம், கவிதை by on October 3, 2016 0 Comments

Tamil-village-girl-withflowers_620x775

சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..

பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….

சேரன் இரும்பொறையின் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
அவன் வீரமும் வலுவிழந்து
போயிருக்கும் உன் விழியசைவில் …

அழகே உன்னை ஆராதிக்கிறேன் …!!

மௌனத்தின் வலி

இலக்கணம் அறியாதவன் நான்
தலைக்கனம் இல்லாதவன் நான்
ஒரு கணம் உனைப் பார்த்ததும்
அக்கணம் எனை இழந்தேன்!
உனைக் கண்டதும் கவிதை நூறு கொட்டுதடி
உன் இதழ் சுழிப்பில் அத்தனையும் தவிடுபொடி
உன் இதழால் வலைவீசிப் போறவளே ..!

உன் கருவிழியால் எனைக் கடத்திப் போறவளே ….
ஒற்றைப் பார்வையால் எனைச் சாய்த்தவளே…
உன்னோடு பயணிக்கச் சம்மதமே …..

சாதிகளை உடைத்தெறிந்து சரித்திரம்
இனிதே படைத்திடுவோம்….!!!

சற்றே நின்று விடு …
உன் எண்ணம் என்ன என்னிடம்
இப்பொழுதே சொல்லிவிடு..
மெளனம் வலிக்கிறதடி…

வாழ்வா? சாவா?

ரசிக்க மறந்தேன்

ஒரு அழகியை
ரசிக்க மறந்தேன்
மனைவி என்பதால் …!

ஒரு அழகியை
பூஜிக்க மறந்தேன்
மனைவி என்பதால் ….!

ஒரு அழகியை
நினைக்க மறந்தேன்
மனைவி என்பதால்….!

ஒரு அழகியை
துதிக்க மறந்தேன்
மனைவி என்பதால் …!

ஒரு அழகோவியம்
இனிதே மலர்ந்தது மனையாளாக ….!!

எனையாள…!!! கண்டேனடி….!!!

ஆசையா இருக்கு

குளிச்சு முடிச்சுட்டு
கூந்தலின் ஈரம் சொட்ட
அடுக்களையில் நீ நுழைய
கடைக்கண்ணால் எனை இழுத்தபடி …

விழியீர்ப்பில் நான் நனைய
மஞ்சள் அரைச்சுக் குளிச்கையிலே
மஞ்சத்தில் இளைப்பார வேண்டி
கண்ணோரம் கட்டியிழுத்தாயோ….

மல்லிகைப் பூவும் தான்
தலையில் வைச்சு இந்த மாமன்
மனசைக் களவாடிட மாலை வேளையிலே
விளக்கேத்தி ஏங்கி நின்னாயோ…..

ஓலப்பாய் விரிச்சு
ஒத்தையிலே நானிருக்க
ஒத்தையடி பாதையில
ஒத்தையாய்ப் போறவனே ஒத்திகை பார்ப்பதில தயக்கம் என்ன மச்சானே…

விரசா வீசுற காத்துக்கூட
காதோரம் கவிபாட
கானக்குயில் கூவுவதையும் மறந்தேனே
மடியில் தலை வைச்சுக் கண்ணசர
விரசாப் போறவரே சத்த நிப்பீரோ?

ஆசையா இருக்கு மச்சான்!

உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad