மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது
மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75.
நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். 1901ம் ஆண்டில் இருந்து நோபல் விருது இதுவரை 113 இலக்கியப் படைப்பாளிகளிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்ற 54 வருடங்களாக ஆங்கில கவிப் புனைவில், தனித்துவம் வாய்ந்த கலை-கவிதை ஒப்பியலை உருவாக்கியவர் பாப் டிலன் அவர்கள். இந்த நோபல் விருது 8 மில்லியன் சுவீடிஷ் குரோனர், ஏறத்தாழ $900,000 ஐ (அமெரிக்க டாலர்) பரிசாகக் கொண்டது.
இசைக்கவி பாப் டிலன் அவர்கள் பாட்டு வரிகளால் பலன் பெற்ற பிரபல பாடகர்கள் பலர். இவர்களில் டேவிட் போவி, ஜானி காஷ், ஜெரி கார்சியா, ஜான் லெனன், போல் மக்கட்டினி, புரூஸ் ஸ்பிரிங்ஸ்ரீன் என்று பட்டியல் போய்க் கொண்டே இருக்கும்,
டைம் சஞ்சிகை (Time Magazine), சென்ற நூற்றாண்டில் மிக முக்கியம் வாய்ந்த 100 பேர்களில் பாப் டிலனும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளது
பாப் டிலன் பற்றிய உள்ளுர் துணுக்குகள்
இவர் முழுப் பெயர் ராபர்ட் அலென் சிமர்மன் Robert Allen Zimmerman.
பிறந்த இடம் : டுலூத் மினசோட்டா Duluth Minnesota
பிறந்த திகதி : May 24, 1941
வளர்ந்த ஊர் : ஹிப்பிங் மினசோட்டா (Hibbing Minnesota)
படித்த இடம் : மினசோட்டா பல்கலை (University of Minnesota)
பாப் டிலனின் படைப்புக்களை இவ்விடம் பார்க்கலாம்
https://en.wikipedia.org/wiki/Bob_Dylan_discography
– தொகுப்பு யோகி
Tags: Bob Dylan, Duluth, Nobel prize, துலூத், நொபல் விருது, பாப் டிலன்