க்ளோத்திங் ஆப்ஷனல்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்….. என்று அசுர தொனியில் அலாரம்
அடித்துக் கொண்டிருந்தது….
எதிர்பாராத நேரத்தில், தலையில் பெரிதாக ஏதோ விழுந்தது போல துள்ளிக் குதித்து எழுந்தாள் ஷாலினி. எழுந்து இருட்டில் சுற்று முற்றும் பார்த்தாள். இருட்டு கண்களுக்குப் பழகும் வரையில் ஒன்றும் புரியவில்லை. படுக்கைக்குப் பக்கத்திலிருக்கும் நைட் ஸ்டாண்டில் உள்ள அலாரம் க்ளாக் ஆறு மணி பதினைந்து நிமிடம் என்று நீல நிற நியான் ஒளியில் கண்களைக் கூசிக் கொண்டு, கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது…. இப்பதான் படுத்த மாதிரி இருந்துது, அதுக்குள்ள விடிஞ்சிருச்சா, என்று நினைத்த ஷாலினி வெறுப்பாக அந்தக் கடிகாரத்தின் தலையில் ஒரு அடி போட்டு அதன் வாயை மூடினாள்.
படுக்கையறையின் ஒரு பகுதியில் இருந்த பெரிய ஜன்னலின் வழியே வெளியே பார்க்க, இன்னும் இருட்டாகத்தான் இருந்தது… இந்த ஊர்ல விண்டர் டைம்ல சூரியன் வரதுக்குள்ளே மத்தியானமே ஆயிடும் போல இருக்கு என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டே தனக்கு மேலிருந்த போர்வையை விலக்கி எழ முயன்றாள்…
போர்வையை விலக்க, விலக்க ஃபேன் காற்றால் உண்டான குளிரை உடம்பு உணர ஆரம்பித்தது. குளிரை அதிகமாக உணர்வதற்கான காரணம் உடலை மறைக்கும் உடைகள் இல்லாதது என்பதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள் ஷாலினி. உடம்பின் மிருதுவான பாகங்களிலெல்லாம் சிறு சிறு கொப்பளங்களாகக் குளிரிலான கூஸ்பம்ப்ஸ் வர ஆரம்பித்திருந்தன. நிஜம் புரிந்தபின், அறையில் யாரும் இல்லாவிட்டாலும், இருட்டாக இருப்பினும், பெண்மைக்கே உள்ள கூச்சம் பருவ உடலின் கவர்ச்சி பாகங்களை அனிச்சையாக ஒரு கையால் மூடிக்கொள்ள, மறு கையால் இரவின் கிறக்கத்தில் களைந்து வீசிய உடைகளைத் தேடத் தொடங்கினாள். இரவில் அவிழ்க்கையில் இருந்த உற்சாகம் இப்பொழுது வெட்கமாகவும் குற்ற உணர்வாகவும் மாறத் தொடங்கியிருந்தது… இரவில் இந்த உடைகள் உடலிலிருந்து உரிகையில் உடனிருந்தவன்…. ஹர்ஷ்… சில உடைகள் உரிந்ததற்கான கருவியும் அவனே……
ஹர்ஷ்…… அவனை நினைத்ததுமே உள்ளத்தில் ஒரு இனம்புரியாத இன்பம். அந்த அரும்பு மீசை….. எலுமிச்சை நிறக் கன்னத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய் வளர்ந்து முழுமை பெறாத தாடி…. இருபத்தி மூன்றைப் போன வாரந்தான் கடந்தவன். ஆறடிக்கும் அதிகமான உயரம். தமிழ் நாட்டில் பிறந்திருந்திருந்தாலும், ஆறு வயது முதலாக அமெரிக்காவில் வளர்ந்தவன். முழுமையாக அமெரிக்க வாழ்க்கை முறைக்கு மாறியிருந்தாலும், தமிழில் இன்றும் சகஜமாகப் பேச முடிந்தவன். பெற்றோரையும், அவர்களின் நண்பர்களையும் மரியாதையாக நடத்துபவன். பதின்பருவத்திலிருந்து உடற்பயிற்சி செய்து உடம்பைத் தேக்கு மரம்போல் வைத்திருப்பவன். அவனது இடது மார்பில், வலக் கன்னத்தைப் பதித்து, இடது கையை அவனுடலில் உரிமையுடன் எங்கும் ஓட்டி, அவனருகில் படுத்திருப்பதில் கிடைக்கும் இன்பத்தை வேறெங்கும் கண்டதில்லை ஷாலினி. அவன் முன்னே எதற்காகவும் பயந்ததில்லை, கூசியதில்லை, எல்லாவற்றையும் உரிமையென நினைத்தாள் அவள்.
ஷாலினி….. தென் தமிழகத்தில் கிராமத்தில், கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். வெளி வாசலுக்குச் செல்கையில், எதனையும் எவரையும் ஏரெடுத்துப் பார்த்தறிந்தவளல்ல. அதனால், எதற்கும் பயந்தவள் என்று பொருள் கொள்ளலாகாது. பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுப்பவள். ஆனால், பெண்ணடிமைத்தனத்தைக் காட்ட வரும் எவரிடமும் பயமில்லாமல் எதிர்க்கும் தைரியமும் அறிவும் கொண்டவள். படிப்பில் சூட்டிகை அதிகம், கிராமத்துக்கு அருகிலுள்ள நகரில் பொறியியல் படிப்பு முடித்தவுடன், டோஃபல் மற்றும் ஜி.ஆர்.ஈ. எழுதித் தேர்ச்சி பெற்றவள். டோஃபலில் ரீடிங்க், லிஸ்சனிங்க், ரைட்டிங்க் மற்றும் ஸ்பீக்கிங்க் எல்லாவற்றிலும், முப்பது மதிப்பெண்களுக்கு இருபத்து ஐந்துக்கும் மேல் பெற்றவள். எதையும் தீர்க்கமாகச் சிந்தித்துச் செய்பவள்.
அவள் அப்பாவிற்கு அவள்மேல் தீராத நம்பிக்கையுண்டு. அம்மா சில கட்டுப்பாடுகளை விதித்தாலும், அப்பாவின் உதவியால் அவற்றைத் தவிர்த்து, தனக்கு வேண்டியவைகளைச் செய்து முடித்துக் கொள்ளும் திறமையைக் கற்றிருந்தாள். அப்படி அடைந்ததுதான் அமெரிக்காவில், யுனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் கிடைத்த மேல் படிப்பு. இருபத்தொரு வயதில் நாடு விட்டு நாடு வந்து, நண்பர்களுடன் சேர்ந்து எங்கோ தங்கி, எதையெதையோ உண்டு, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இருந்த ஷாலினியின் வாழ்வில் குறுக்கிட்டான் முதுகலை மாணவன் ஹர்ஷ்….
பல நாட்கள் பழக்கத்திற்குப் பிறகு, இருவரின் ரசனைகளும் ஒன்றெனப் புரிய, இருவருமே ஒன்றாகினர். அதே ஊரில் வாழும் பெற்றோர்களின் இல்லத்திலிருந்தே கல்லூரிக்குச் சென்று வரும் ஹர்ஷ், அவ்வப்பொழுது ஷாலினியின் அபார்ட்மெண்டில் தங்கலானான். அவன் வந்து தங்க வேண்டுமென்பதாலேயே, ரூம் மேட் எவரையும் வைத்துக் கொள்ளாமல் முழு வாடகையையும் தானே கொடுத்துக் கொண்டு தனியாக வாழ்கிறாள் ஷாலினி…… அவனது சில உடைகள் அவளின் அபார்ட்மெண்டிலேயே வைக்கப்பட்டிருந்தன, அவ்வப்பொழுது வரும்பொழுது உபயோகமாக இருக்குமென. இதனை ஹர்ஷின் பெற்றோரும் அறிந்தே இருந்தனர். அமெரிக்க வாழ்வில் இது சகஜம். சொல்லப்போனால், தம் பிள்ளை இன்னொரு தமிழ்ப் பெண்ணின் பின்னால்தான் போகிறான் என்ற சந்தோஷத்திலேயே இருந்தனர் அவர்கள்.
உடலுறவு திருமணத்திற்குப் பிறகுதான் என்ற நிபந்தனைகளை இன்றைய சமுதாயம் மீறிப் பலகாலங்கள் ஆகிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இன்றும் இந்தியாவில் அந்த நிபந்தனைகளைக் கடைபிடிப்பவர்கள் இருக்கின்றனர் எனினும், அங்கும் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முழுவதுமாக அதுபோன்ற கட்டுக்கோப்பில் வளர்ந்திருந்தாலும், அவற்றை மீறியவள்தான் ஷாலினி. அதற்காக, ஒவ்வொரு வார இறுதியிலும் மதுபானம் பருகிவிட்டு, நகரின் இருட்டான பகுதிகளுக்குச் சென்று நண்பர்களுடன் நடனமாடுபவள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிடக் கூடாது. தன்னை உளமாற நேசிப்பவனை, தனது ரசனைகளுக்கு ஒப்ப ரசனைகள் உடையவனை, தன்னை எப்பொழுதும் ஆராதிப்பவனை, திருமணத்திற்கு முன்னர் உணர்வால் மட்டுமின்றி, உடலாலும் சேர்வதில் தவறு ஒன்றுமில்லை என்று நினைப்பவள். அவ்வளவுதான்…..
சில மணித்துளித் தேடலுக்குப் பிறகு, இடுப்புக்குக் கீழே மறைக்கும் உள்ளாடை மட்டும் கையில் கிடைக்க, அது ஒன்றே போதுமென்று அதனை அணிந்து கொண்டு குளியலறை நோக்கி நடக்கலானாள் ஷாலினி. இப்பொழுது கூச்ச உணர்வு சற்றுக் குறைந்திருந்தது. இருந்தாலும், விளக்கு எதனையும் போடாமல், இருட்டிலேயே நடந்து, படுக்கையறையுள் இன்னொரு பகுதியிலமைந்த குளியலறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்., வீட்டில் வேறு யாரும் இல்லாவிட்டாலும், கதவை
மூடிக் கொள்ளும் பழக்கம் மட்டும் போகவில்லை. டாய்லெட்டில் உட்கார்ந்து காலைக் கடன்கள் துவங்க, மல்டை டாஸ்க்கிங்காக ஃபோன் எடுத்து இரவுப்பொழுதில் வந்திருந்த மெஸ்ஸேஜ்கள் அனைத்தையும் படிக்கத் தொடங்கியிருந்தாள்.
வழக்கம் போல முதலில் எதிர்பார்த்து, படிக்கத் தொடங்கியது ஹர்ஷிடமிருந்து வந்த செய்திகள். வாட்ஸாப்பைத் திறக்க, ஒன்றிரண்டு “ஐ லவ் யூ”க்களுக்குப் பிறகு, இன்னமும் டவுன்லோட் ஆகாமல் காத்திருந்த இமேஜ் கண்ணில் பட்டது. என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மிகுதியால் அதனை, க்ளிக் செய்ய, சிறிது சிறிதாக டவுன் லோட் ஆகத் தொடங்கியிருந்தது அந்தப் படம். உடையேதும் அணிந்திராத ஒரு பெண் படுக்கையில் படுத்திருக்கும் காட்சி.. அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கடைசியாக டவுன்லோட் ஆகியது அந்தப் பெண்ணின் முகம். பார்த்த மாத்திரத்தில் உடம்பின் தண்டுவடத்தின் கீழ் தொடங்கி ஒரு மின்சாரம் மூளை வரை பயணித்து முடித்தது அவளுக்கு., ஏனெனில், அந்த முகம் அவளின் திருமுகம்….
அதாவது, நேற்று இரவு எல்லாம் முடிந்த பின்னர் களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த தன்னை முழு நிர்வாணமாகப் படமெடுத்திருக்கிறான் ஹர்ஷ், அதனைத் தனக்கே அனுப்பியிருக்கிறான் என்று புரிந்தது அவளுக்கு. உடனே வந்த கோபத்திற்கு அளவேயில்லை. தன் அனுமதி இல்லாமல் எப்படி இது போலப் படம் எடுக்கலாம் என்று நினைக்க நினைக்க அவளின் கோபம் அதிகரித்துக் கொண்டே போனது.
உடனே ஃபோனை எடுத்து, ஹர்ஷுக்கு டயல் செய்ய, ஒரு சில ரிங்களுக்குப் பிறகு மறுமுனையில் ஃபோன் எடுக்கப்பட்டது. எடுத்துப் பேசியவன் ஹர்ஷ்தான், தூக்கக் கலக்கத்திலிருந்த குரல்.. ஃபோனை எடுத்தவுடனேயே, அஃபென்ஸில் இறங்கி விட்டிருந்தாள் ஷாலினி.. “வாட் இஸ் திஸ் ஹர்ஷ், வாட் டூ யூ திங்க் யூ ஆர் டூயிங்க்…” கேட்ட மாத்திரத்தில், “ஷாலு, டூ யூ நோ வாட் டைம் இட் இஸ்? ஐ வில் கால் யூ பேக்” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தான் ஹர்ஷ்.
அவன் சொல்வதும் சரிதான். இன்று சனிக்கிழமை, விடுமுறை நாள். நான் வெளியே போகவேண்டுமென அலார்ம் வைத்து எழுந்தேன். இன்னும் காலை ஆறரை மணிதான் ஆகிறது, அவன் எதற்காக எழுந்திருக்க வேண்டும். நினைத்த மாத்திரத்தில், அவனுக்கு மறுபடியும் கால் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டு பல் துலக்கச் சென்றாள் ஷாலினி. கண்ணுக்கு முன் டபுள் சிங்க்கிற்குப் பின்னால் பிரம்மாண்டமாய் நிற்கும் கண்ணாடியில் இடுப்பிற்குக் கீழ் மட்டுமணிந்த உள்ளாடையுடன் அரை நிர்வாணமாய் நின்ற தன் உடலழகைத் தானே ரசித்துக் கொண்டு பல் துலக்கத் துவங்கினாள். ஒரு முறை பெருமூச்சு விட்டுக் கொண்ட ஷாலினி. “மே பி, ஹி வாண்டட் டு கீப் திஸ் மெமொரி… மே பி ஹி வாண்ட்ஸ் டு பி ஏபிள் டு சீ மி லைக் திஸ் வென்னெவர் ஹி வாண்ட்ஸ்….” அதுக்குத்தான் ஃபோட்டோ எடுத்துக்கிட்டு போயிருப்பான்… பட் தென்… ஹி ஷுட் ஹேவ் காட் மை பெர்மிஷன்… என்ன இருந்தாலும், என்னைக் கேக்காம எடுத்தது தப்பு… நினைத்த மாத்திரத்தில், மற்றொரு நினைப்பு அதனை மாற்றியது. ஆனா, நமக்குத் தானே அனுப்பி இருக்கான். நெனச்சிருந்தா நமக்கிட்ட காட்டாமலேயே இருந்திருக்கலாமே.. தப்பான எண்ணமிருந்திருந்தா படம் எடுத்ததச் சொல்லாம இருந்திருக்கலாமே….. ஹர்ஷை ஆதரித்துத் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
பல் தேய்த்து முடித்து, நீளமான கரிய கூந்தலை சுருட்டிக் கொண்டை போல் போட்டுக் கொண்டு, அதனை ஷவர் கேப் போட்டு மறைத்துக் கொண்டாள். அதன் பின்னர் அணிந்திருந்த ஒரே உள்ளாடையையும் அவசரமாய்க் களைந்தெறிந்து சுடச்சுட ஓடிக்கொண்டிருக்கும் ஷவரில் மெதுவாகத் தன் உடலைப் பொருத்திக் கொண்டாள். சுடுநீரின் ஸ்பரிசம் உடலைத் தழுவ, அது உள்ளத்தில் சற்றுக் காமத்தை அதிகரிக்க, தலையை உயர்த்தி நீரை முகத்தில் வாங்கிக் கொண்டே தனக்குப் பிடித்தமான ஏ.ஆர். ரெஹ்மான் பாடலை முணுமுணுக்கலானாள் ஷாலினி.
டைனிங் டேபிளில் அமர்ந்து, ஹனி பஞ்ச்சஸ் ஆஃப் ஓட்ஸ் சீரியலைப் பாலில் நனைத்து, நிதானமாகத்
தின்று கொண்டே அன்றைய தட்பவெப்பம் குறித்த செய்திகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள் ஷாலினி. அப்பொழுது அவளது செல் ஃபோன் மெதுவாகச் சிணுங்கியது. எடுத்துப் பார்க்கையில், அந்த செல் ஃபோன் திரையில் ரொமாண்டிக்காக சிரித்துக் கொண்டு ஹர்ஷ் தெரிந்தான். தான் காலையில் செய்த ஃபோன் காலை இப்பொழுது ரிடர்ன் செய்கிறான் என்று நினைத்துக் கொண்டே, அவசர அவசரமாக ஃபோனை எடுத்தாள்
ஷாலினி.
“ஹாய் ஸ்வீட்டி”…… ஷாலினியின் குதூகலமான க்ரீட்டிங்ஸ்.
“ஹே… ஒய் டிட் யூ வேக் மி அப் சோ ஏர்லி?” என்று சற்றே கோபத்துடன் பேச்சைத் துவங்கினான் ஹர்ஷ்.
நியாயமக் கோபப்பட வேண்டிய ஷாலினி, தானாகச் செய்து கொண்ட சமாதானங்களினாலும், அவன் மேலிருந்த காதலினாலும், காலைப் பொழுதிலியே மனது முழுதும் நிறைந்திருந்த காம உணர்வினாலும், அவனிடம் கோபப்படாமல் “சாரி, ஸ்வீட் ஹார்ட்…. ஐ வாஸ் சோ டிஸ்டர்ப்ட் வித் தட் பிக்சர் யூ செண்ட்…”
“வாட்? வாட் பிக்சர்? வாட் ஆர் யூ டாக்கிங்க் அபவுட்?” குழம்பிய ஹர்ஷின் பதில்.
“கம்மான் ஹர்ஷ்…. த பிக்சர் யூ டுக் ஆஃப் மீ லாஸ்ட் நைட்…” தெரிந்து
கொண்டே தன்னை சோதனைக்குள்ளாக்குகிறான் என்ற சந்தேகத்துடன் சற்றே வெறுப்பு தொனியில்
ஷாலினி.
“வாட் பிக்சர்… ஐ ஹேவ் நாட் டேக்கன் எனி பிக்சர், நார் தட் ஐ செண்ட் எனி…” என்று ஹர்ஷ் சொன்னதும் அவளுக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது. ”ஆர் யூ ஷ்யூர்?” என்ற ஷாலினிக்கு, “வாட் ஷாலூம்மா, வாட்ஸ் த மேட்டர்.. வாட் பிக்சர்?” என்று திரும்பத் திரும்பக் கேட்கும் ஹர்ஷை நம்பத் தொடங்கினாள்.
அப்படியானால் அந்தப் படத்தை எடுத்தது யார்? அனுப்பியது யார்? ஹர்ஷின் ஃபோனிலிருந்து வந்ததே, இவன் பேசுவதைப் பார்த்தால் பொய் சொல்வதாகத் தெரியவில்லையே!……… ஒன்றும் புரியவில்லை.
அதே நேரத்தில் ஃபோனின் மறுமுனையில் இருந்த ஹர்ஷிற்குச் சட்டெனப் பொரி தட்டியது….. நேற்று இரவு, தன் ஃபோனில் சார்ஜ் தீர்ந்து விட்டது, ஒரு கால் செய்ய வேண்டும் என்று என் ஃபோனை வாங்கிச் சென்று ஒரு மணி நேரம் கழித்துக் கொண்டு வந்து கொடுத்தானே….. விக்ரம்? நினைத்த மாத்திரத்தில், “ஷாலினி, ஐ வில் கால் யூ ரைட் பேக்” என்று கூறி விட்டு அவளின் பதிலுக்கும் காத்திராமல் ஃபோனைத் துண்டித்தான் ஹர்ஷ்.
ஃபோனைத் துண்டித்த ஹர்ஷ், தனது ஃபோனிலிருந்து அனுப்பப்பட்ட செய்திகளை ஆராயத் தொடங்கினான். ஷாலினி சொன்னது போல எந்தச் செய்தியும் அனுப்பப் பட்டிருக்கவில்லை. விக்ரம் அனுப்பியிருந்தானெனில், அதற்கப்புறம் டெலீட் செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே அவனது ஐ-ஃபோனில் ஃபோட்டோஸ் செக்ஷனில் க்ளிக் செய்தான். கடைசியாகப் பார்த்த ஃபோட்டோவைக் காட்டும் ஐ-ஃபோன், கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட, ஷாலினி டூ பீஸுடன் அவளது பெட்டில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த படத்தைக் காட்டியது.
ஷாலினியிடம் சற்று எக்ஸ்பிளிஸிட்டான ஃபோட்டோ வேண்டும் கெஞ்சிக் கூத்தாடி எடுத்தது… அவளது படுக்கையிலே உள்ளாடைகள் மட்டும் அணிந்து கொண்டு அவள் படுத்திருப்பது போன்ற படம். அவள் முழுவதுமாய் அதனைச் சரிபார்த்து, வேறு எதுவும் விரசமில்லை என்று உறுதி செய்த பின்னரே அவனது ஃபோனில் இருந்துவிட்டுப் போகட்டுமென்று விட்ட ஃபோட்டோ அது……… இந்தப் படம் எடுத்ததே மறந்து விட்டிருந்தது. இந்தப் படத்தை அவன் சமீபத்தில் பார்த்தது கூடக் கிடையாது. அது இப்பொழுது ஐ-ஃபோனில் தெரிகிறது என்றால்? …. யாரோ சமீபத்தில் பார்த்திருக்கிறார்கள் என்றுதானே பொருள்… ஃபோனை நேற்று நம்மிடமிருந்து வாங்கியவன் விக்ரம்……
ஹர்ஷ் அவசர அவசரமாய் ஷாலினிக்கு மீண்டும் ஃபோன் செய்கிறான். “ஹேய், கேன் யூ செண்ட் மி த பிக்சர் யூ காட் லாஸ்ட் நைட்?” என்ற ஹர்ஷிடம், “ஒய்?” என்கிறாள் ஷாலினி. “ப்ளீஸ் டூ….. ஐம் ஆன் டு சம்திங்க்” என்ற ஹர்ஷின் குரலில் தெரிந்த ஷெர்லக் ஹோம்ஸ் ஷாலினிக்கு நம்பிக்கை கொடுத்தது அந்தப் படத்தை அனுப்பி வைக்கிறாள். அதனைப் பார்த்தவுடன் ஹர்ஷிற்கு எல்லாம் விளங்கி விட்டது. இத்தனைக்கும் காரணம் அந்த விக்ரம்தான் என்பது எளிதில் விளங்கிவிட்டது.
நேற்று ஷாலினி வீட்டில் சல்லாபங்களை முடித்துக் கொண்டு, நேரே வீட்டிற்குச் செல்லாமல் அதே அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்சில் அடுத்த பில்டிங்க்கில் குடியிருக்கும் ரையன் வீட்டிற்குச் சென்றான் ஹர்ஷ். அங்கே வார இறுதி இரவுப் பார்ட்டி அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. கல்லூரியைச் சுற்றி இருக்கும் மாணவர்களின் அபார்ட்மெண்டில் இதுபோல நடப்பது சர்வ சாதாரணம். அழைப்பில்லாமல் அவரவர்களின் நண்பர்களின் இல்லப் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் சாதாரண நிகழ்ச்சி. ஹர்ஷ் மது பானம் அருந்தாதவனென்றாலும், நண்பர்களின் மத்தியில் அமர்ந்து அவர்களுடன் பொழுது போக்குவது பிடிக்குமென்பதால் அவ்வப்பொழுது கலந்து கொள்வான். மதுபானம், புகைப்பழக்கம், அசைவ உணவு சாப்பிடாதது போன்ற “நல்ல” பழக்கங்களால் அனைத்து நண்பர்களின் கேலிக்கும் உள்ளாகும் அவன், அவற்றை ஒரு பொருட்டாக நினைத்ததில்லை.
விக்ரம்…..
அவனும் பட்டமேற்படிப்பிற்காக சென்னையிலிருந்து இந்த ஊருக்கு வந்தவன். அதே கல்லூரியில், ஹர்ஷின் வகுப்பில் படிப்பவன். ஹர்ஷ், ஷாலினியை அவனுக்கு அறிமுகப்படுத்தியதிலிருந்து அவள் மேல் ஒரு கண் வைத்திருந்தவன். ஹர்ஷும் ஷாலினியும் காதலர்கள் என்று மாறுவதற்கு முன்னால் பல முறை ஷாலினியை அனுபவித்துவிட முயற்சி செய்து தோற்றவன் விக்ரம். அரசல் புரசலாக முயற்சிக்கும்பொழுது டிப்ளமேடிக்காக விலகிச் சென்ற ஷாலினி, ஒரு முறை நேரடியான தொடுதலுக்கு உள்ளானாள்.
இதுபோன்று, நண்பர்களின் பார்ட்டி ஒன்றில், அளவுக்கு மீறிக் குடித்திருந்த விக்ரம், பார்ட்டியிலிருந்து கிளம்பி அந்த இரவுப் பொழுதில் தனது அபார்ட்மெண்ட்டிற்குத் தனித்தே நடந்து சென்ற ஷாலினியை வழியில் மறித்து, அவசரமாய்க் கட்டிப் பிடித்து பலவந்தமாய் இதழோடு இதழ் சேர்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த பலவந்தத்தைத் தடுக்க முடியாத ஷாலினி, அடுத்த வினாடி அவனைத் தன்னிடமிருந்து தள்ளி, பலங்கொண்ட மட்டும் ஓங்கி ஒரு அறை கொடுத்தாள். அதனோடு, “இஃப் ஐ கம்ப்ளெய்ன் டு த காப்ஸ் ஹியர், யுவர் லைஃப் இஸ் ஆல் கான்… ஐம் கோயிங் டு ஃபர்கிவ் யூ பீயிங்க் ஃப்ரம் த சேம் கண்ட்ரி அண்ட் நோயிங் ஈச் அதர்… டு நாட் சீ மீ எவர் அகய்ன்…” என்று சொல்லிவிட்டு, வேகமாய் அங்கிருந்து விலகிச் சென்றாள்.
அவனது நண்பனைக் குறித்துத் தவறுதலாகச் சொல்லக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், விக்ரம் குறித்து ஹர்ஷிடம் ஷாலினி எதுவும் சொன்னதில்லை. அனைத்துத் தவறுகளையும் தன்னிடம் வைத்திருந்த விக்ரமோ அந்த நிகழ்ச்சி பற்றி ஹர்ஷிடம் எதுவும் சொல்லாதிருந்தது வியப்புக்குரியதல்ல. ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கையிலெல்லாம் ஷாலினி குறித்து நளினமாக, ஏதேனும் தவறுதலான செய்திகளைச் சொல்லிக் கொண்டுதானிருப்பான். சில தினங்களுக்கு முன்னர்தான் விக்ரமின் பலவந்தம் குறித்து வேறொரு நண்பி மூலம் அறிந்திருந்தான் ஹர்ஷ். ஆனால் அது பற்றி ஷாலினியிடமோ, விக்ரமிடமோ எதுவும் கேட்கவில்லை.
ஷாலினியையும், ஹர்ஷையும் பிரிக்கும் எண்ணத்துடன் உள்ளாடைகளுடன் இருந்த ஃபோட்டோவை, சில மல்டைமீடியா சாஃப்ட்வேரின் மூலம் நிர்வாணமாக்கி, ஹர்ஷ் அனுப்புவதுபோல் அவனது ஃபோனிலிருந்து அனுப்பியவன் விக்ரம் தான் என்பது ஹர்ஷிற்கு முழுவதுமாக விளங்கி விட்டது.
இப்பொழுது அவனது கவனமெல்லாம் ஒன்றே ஒன்றில்தான். இதனை எப்படி நிரூபித்து, ஷாலினியை நம்ப வைப்பதுடன் விக்ரமையும் தண்டிப்பது என்பதே அது !!
-காதல் கிறுக்கன்.