வீணாக்கப்படும் உணவுப் பொருட்கள்
வட அமெரிக்காவில் வாழும் நாம் அனைவரும் வேளாவேளைக்கு மளிகைக்கடை, காய்கறிக்கடை போய் வருகினும் நாம் வாங்கும் நான்கு காய்கறி பொட்டலங்களில், பைகளில் ஒன்றை வழக்கமாக குப்பையில் எறிந்து வருகிறோம் என்றால் நம்புவீர்களா?
மேலும் நாம் வருடத்தின் பண்டிகை காலங்களை அனுகுகிறோம். எனவே நாம் பல்வேறு கொண்டாட்டங்களையும் கோயில், தேவாலயங்கள், மண்டபங்கள், உணவகங்கள், வீடுகளிலும் விருந்தாளிகளை வரவேற்று களிப்புடன் விருந்துணவில் பங்குபற்றிக் கொள்வோம்.
எனவே சூழல் – சுகாதாரம் பேணுவதையும், நடைமுறை எரிபொருள் உற்பத்திச் செலவுகளையும் எவ்வாறு பொறுப்பறிவுடன் கையாளலாம் என்று பார்ப்போம்.
இதோ சில உணவுப் பண்டம் வீணாக்குதல் பற்றிய புள்ளிவிபரவியல் கீழே
- சராசரி 4 ஆட்கள் கொண்ட அமெரிக்கக் குடும்பம் தனது வருடாந்த நுகர்வுச் செலவுகளில் 1,500 டொலர்களை வீணாக்குகின்றனர்.
தொகுப்பு : அமெரிக்க விவசாய இலாக்கா
- அமெரிக்காவில் மொத்த உணவு வீணாக்குவதில் 43 சதவீதம் நுகர்வோர் வீடுகளிலும், 40 சதவீதம் நுகர்வோர் வர்த்தக உணவகங்களிலும், 16 சதவீதம் பேர் விவசாயத்திலும், 2 சதவீதம் நுகர்வோர் உணவு தயாரிப்புத் தொழிற்சாலைகளிலும் உணவை வீணாக்குகின்றனர்.
- வீணாக்கப்படும் பிரதான உணவுப் பண்டங்களில் இலைகறி பழங்கள் 48 சதவீதம் உட்கொள்ளப்படுகின்றன மீதி 52 சதவீதம் குப்பையில் வீசப்படுகின்றன. தானியங்கள் 62 சதவீதம் உட்கொள்ளப்படும் அதேவேளை 38 சதவீதம் குப்பையில் போடப்படுகிறது. பால் 80 சதவீதம் உட்கொள்ளப்படும் அதேவேளையில் 20 சதவீதம் குப்பையில் கொட்டப்படுகிறது. மாமிசம் 78 சதவீதம் உட்கொள்ளப்படுகின்ற அதேசமயம் 22 சதவீதம் குப்பையில் போகிறது. கடலுணவு 50 சதவீதம் உட்கொள்ளப்பட்டும் 50 சதவீதம் குப்பையிலும் போகிறது.
நாம் எவ்வாறு உணவு வீணாக்குதலைக் குறைக்கலாம்
உணவு வீணாகுவதைக் குறைப்பது பொறுப்புள்ள நுகர்வோர் ஆகிய எம்மைப் பொறுத்துள்ளது. நாம் எமது உணவு வாங்கும் பின்னர் உட்கொள்ளும் தன்மையை சற்று கரிசனையுடன் எடுத்துப் பார்க்க வேண்டும். இதனை ஒற்றி எமது சமைத்தல், சாப்பிடல் வழக்கங்களை உண்டாக்கிக் கொள்ளுதல் நலம்.
உணவு கொள்வனவுக்குப் போகும் போது ஏற்கனவே சிந்தித்துத் தயாரித்த பட்டியலுடன் போவது சிறந்த விடயம்.
அழகிய பல அமெரிக்க உணவுப் பண்டக் கடைகள், பலவித கவனத்தை ஈர்க்கும் உணவுப் பண்ட கோலாகல அலங்காரங்கள் காணப்படும். ஆயினும் சற்று நின்று சிந்தித்து இதை வாங்கினால் நல்லது.
கொள்வனவு செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் யாவற்றையும் . எச்சம் (மீதி) இல்லாமல் ஒன்றையும் வீணாக்காது சமைக்க, உணவு தயாரிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாங்கிய பொருட்களில் எஞ்சியதைக்க கொண்டு சமையல், சிற்றுண்டிகள் தயாரிக்கப் பழக வேண்டும்.
உணவு வகைகளை விதம் விதமாகக் கலந்து புதிய பாணியில், புதிய ரக தின்பண்டங்கள் உருவாக்க முனையலாம்.
கொண்டாட்டங்கள், விருந்துபசாரம், வெளியே உண்ணல் போன்றவற்றில் எந்த வகையான உணவுகள் யாவராலும் மிகுந்தளவில் விரும்பி உண்ணப்படலாம் என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கமைய உணவுகளைத் தாயாரிப்பது நல்லது.
மேலும் மேலதிக உணவு இருப்பின் இதை சமூகத்துடன் பகிர்ந்து பலன் அடையவும் திட்டமிடலாம்.
மேலே கூறிய முறைகளில் நாம் உணவு வீணாக்குதலை எங்களால் முடிந்தளவு குறைத்துக்கொள்ளப் பார்க்கலாம்.
மேலும் நீங்கள் இது பற்றி அறிந்து கொள்ள
- Just Eat It – A Food Documentary https://www.foodwastemovie.com/
- Food Loss and Food Waster https://www.fao.org/food-loss-and-food-waste/en/
- Food Waste In America https://www.feedingamerica.org/about-us/how-we-work/securing-meals/reducing-food-waste.html
தொகுப்பு : யோகி