\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காகிதக் கப்பல்கள் !

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments

paperboats_620x620

குடிசையில் வாழ்ந்தாலும்
மழை வெள்ளம் வந்துவிட்டால்
குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்
காகிதங்களைக் கிழித்து மடித்து
கத்திக்கப்பல், சாதாக் கப்பல்
காகிதக் கப்பல்கள் உருவாக்கி
மழை நீரில் மிதக்க விட்டு
மகிழ்ச்சி பொங்க ரசிப்பார்கள் !

மழை வெள்ளத்தில்
மண்குடிசைகள் மிதக்கின்றன
காகிதக் கப்பல்களாக
கரை சேராமல் தத்தளிக்கின்றன!

அம்பிகாவதி அமராவதி காதல்
அழகிய கட்டுமரக் கப்பலாகி
கடலில் மிதந்து சோககீதம் பாடி
கரை சேர்ந்து அமர காவியமாகியது !

பெண்களின் கவர்ச்சி அழகில் மயங்கி
போகப் பொருளாக நினைக்கும்
காதலர்களின் காதல் வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !

மெய் மூலம் பிறந்து பொய்யுடன் வாழ்ந்து
பொய் ஆடம்பரத்தில் மிதந்து குளித்து
சுகம் காணும் மனித வாழ்க்கையும்
கரை சேராத காகிதக் கப்பல்கள் !

ஏங்கிய மனம் தூங்கிய நினைவுகள்
பட்டம் வாங்கி பறக்கலாம் வானில்
பட்டதாரியின் கனவுகள் நினைவுகள்
இன்று தத்தளிக்கும் காகிதக் கப்பல்கள் !

எண்ணிக்கையில்லா எண்ணங்களும்
எண்ணங்களின் குவியலில் ஒளிந்து
எண்ணங்கள் வெறுமையாகும்போது
எண்ணங்களின் பின்னால் ஓடிய நம்
மனமும் கரைசேராக் காகிதக் கப்பல்கள் !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad