\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனிதத் தத்துவம்

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments

manithathuvam_620x349

மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….

இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….

இளமை முதுமை
இரண்டுக்கும் இடையே
அரிதாரம் பூசாமலே
ஏன் ஆட்டம் போடுகிறாய் ?

இந்து மதம் மட்டுமா
அர்த்தமுள்ளது
உன் வாழ்க்கையும்
அர்த்தமுள்ளதுதான்
நினைத்துச் செயல்படு !

வாழ்க்கையில்
மனிதநேயத்தை
இனி வளர்த்து
மனிதத் தத்துவம்
புரிந்து கொண்டு
வாழும்வரை மனிதனாக
வாழக் கற்றுக்கொள் !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad