கேனன் காட்டாற்று வெள்ளம்
மினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில் நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன.
வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. இது அமைதியான இந்த ஊர் வாசிகளிற்குப் பல அசௌகரியங்களைத் தந்துள்ளது. இவ்வருடம் கோடை தொடக்கம் கனெண் ஆற்று இரு தடவை மடைகடந்து ஓடியுள்ளது.
காட்டுமண், நாட்டு விவசாயக் காணிநிலம் தொடர் அடைமழைகளால் ஈரப்பதன் அதிகரித்து ஆற்று வெள்ளத்தை உறிஞ்சும் தன்மையை இழந்துள்ளது.
கீழே செப்டெம்பர் மாதம் இறுதிவாரம் எடுத்த படங்கள்.
நார்த் ஃபீல்ட் பிரதான சந்தி
காட்டாறு மடை தாண்டி ஓடுகிறது
ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து மணல் சாக்கு முட்டைகளால் மடைகள் கட்டியுள்ளனர்
சாதாரண நிலையில் ஆறு
காட்டாறு வெள்ளம்
சாதாரண ஆறு ஊரின் நடுவில் ஓடுகிறது
நீர் கட்டங்களினுள் புகுந்த காட்சி
மிஸிஸிப்பி நதியை நோக்கி நீண்ட நெளிந்த பாதையில் விரைகிறது காட்டாற்று வெள்ளம்
தொகுப்பு: யோகி